நிச்சயதார்த்தத்தின்பின் திருமணம் செய்ய மறுத்த பெண் இழப்பீடு வழங்க உத்தரவு: உகண்டா நீதிமன்றம் தீர்ப்பு

Published By: Sethu

02 Feb, 2023 | 01:52 PM
image

தனது காதலனுடனான திருமண நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொண்ட ஒரு பெண்ணுக்கு உகண்டா நீதிமன்றம் 9,439,100 உகண்டா ஷில்லிங் (சுமார் 2,560 அமெரிக்க டொலர்) அபராதம் விதித்துள்ளது.

30 களின் ஆரம்பத்திலுள்ள, கியாரிகுண்டா எனும் பெண்ணுக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

64 வயதான, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவருடன் கியாரிகுண்டா திருமணம் செய்வதற்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. 

அதன்பின், இப்பெண்ணின் சட்டத்துறை டிப்ளோமா பாடநெறிக்கான செலவுகளையும் மேற்படி நபர் செய்திருந்தார்.

எனினும், அந்நபரை திருமணம் செய்வதற்கு பின்னர் கியாரிகுண்டா மறுப்புத் தெரிவித்துவிட்டார் எனவும், வயதான நபரை திருமணம் செய்வதற்கு அப்பெண் விரும்பவில்லை எனவும் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட பணத்தை அவர் திருப்பிச் செலுத்த உத்தரவிட வேண்டும் நீதிமன்றத்திட்ம மேற்படி நபர் கோரியிருந்தார்

இவ்வழக்கை விசாரித்த கனுன்கு நகரிலுள்ள நீதிமன்றம், திருமணம் செய்வதற்கான வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், அப்பெண்ணுக்கு செலவிட்ட பணத்தை மீளப் பெறுவதற்கு மனுதாரர் தகுதியானவர் எனத் தெரிவித்தது.

இதன்படி, 9,439,100 உகண்டா ஷில்லிங் (2,560 அமெரிக்க டொலர்) பணத்தை மனுதாரருக்கு கியாரிகுண்டா செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அத்துடன், மனுதாரருக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள் மற்றும் அசௌகரியங்களுக்காக  அப்பெண் மேலும் 10 லட்சம் ஷில்லிங் (271 டொலர்) வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுளளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்