(எம்.ஆர்.எம்.வசீம்)
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வருவதன் காரணமாக கடந்த இரண்டு நாட்கள் கைவிடப்பட்டிருந்த நாளாந்த மின் துண்டிப்பு புதன்கிழமை (01) மீண்டும் அதனை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் இதுவரை மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மேலும் 10 நிமிடங்கள் அதிகரித்து மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் மின்சார சபை தெரிவித்திருக்கிறது.
என்றாலும் உயர் தர பரீட்சை இடம்பெறுவதால், எதிர்வரும் தினங்களில் மின் துண்டிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது எதிர்பார்த்த மழைவீழ்ச்சி நீர் மின்சார உற்பத்தி பிரதேசங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் நேற்று மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டதாக இலங்கை மின்சாரசபை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் எதிர்வரும் தினங்களில் மின்சாரம் துண்டிப்பதா இல்லையா என எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. என்றாலும் இதுதொடர்பாக இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை மேற்கொள்ள இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM