தெற்கு அதிவேக வீதியில் நேற்றைய தினம் மாத்திரம் ரூபா 18.85 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

நேற்றைய தினம் மாத்திரம் 61 ஆயிரத்து 874 வாகனங்கள் தெற்கு அதிவேக வீதியில் பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், கிறிஸ்மஸ் மற்றும் புது வருட பண்டிகை தினத்தையொட்டி வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.