மீண்டும் வலைத்தள தொடரில் நடிக்கும் சமந்தா

Published By: Ponmalar

02 Feb, 2023 | 12:46 PM
image

'தி ஃபேமிலி மேன்' எனும் வலைதள தொடரில் நடித்திருக்கும் சமந்தா, அந்தத் தொடரின் இயக்குநர்கள் தயாரித்து, இயக்கும் பெயரிடப்படாத புதிய வலைதள தொடரிலும் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ அசல் வலைதள தொடர்களைத் தயாரித்து பார்வையாளர்களுக்கு வழங்குவதில் தனி அடையாளத்தை பெற்றிருக்கிறது.

'சுழல்', 'வெலோனி' ஆகிய அசல் வலைதள தொடர்களின் வரிசையில் புதிய தொடர் ஒன்றை தயாரிக்கிறது.

இதனை 'தி ஃபேமிலி மேன்' எனும் தொடரினை இயக்கிய இயக்குநர்களான ராஜ் மற்றும் டி.கே, அவர்களுடைய தயாரிப்பு நிறுவனமான டி2 ஆர் எனும் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்குகிறார்கள்.

ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான சிட்டாடல் யுனிவர்ஸ் எனும் பிரபலமான ஹொலிவுட் வலைதள தொடரின் இந்திய பதிப்பாக இந்தத் தொடர் தயாராகிறது.

இதில் கதையின் நாயகியாக நடிகை சமந்தா நடிக்கிறார். இவருடன் பொலிவுட்டின் இளம் நடிகரான வருண் தவான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

'சாகுந்தலம்' எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை சமந்தா, பெயரிடப்படாத வலைதள தொடரில் நடிப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right