மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகும் 'கிறிஸ்டி' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

Published By: Ponmalar

02 Feb, 2023 | 12:08 PM
image

'பேட்ட', 'மாஸ்டர்' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான பொலிவுட் நடிகை மாளவிகா மோகனன் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கிறிஸ்டி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'பால்மனம்..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கிறிஸ்டி'. இதில் மலையாள நடிகர் மேத்யூ தோமஸ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ராக்கி மவுண்டன் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சஜய் செபாஸ்டியன் கண்ணன் சதீஷன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற 'பால்மனம்..' எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை வினையா கே சசிகுமார் எழுத, பாடகர் கபில் கபிலன் மற்றும் பாடகி கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலின் காணொளியில் மாளவிகா மோகனின் அழகை கண்டு, நடிகர் மேத்யூ தோமஸ் ரசிப்பதும், தன் காதலை வெளிப்படுத்துவதும், அதனை அவர் ஏற்றுக்கொள்வதும்.. என காட்சிகள் அமைந்திருப்பதால், இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 17ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right