'வாரிசு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'தளபதி 67' என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் தொடக்க விழா காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்ட இயக்குநர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'தளபதி 67'. இதில் விஜய் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் பொலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகர் அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மனோஜ் பரஹம்ஸா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மாஸ் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளரும், 'வாரிசு' திரைப்படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிட்டவருமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்ரீநகரில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த படத்தின் பூஜை தொடர்பான காணொளி பெப்ரவரி முதல் திகதியான நேற்று அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. 'தளபதி 67' படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், புஷ்கர் உள்ளிட்ட பலர் அதிதிகளாக பங்கு பற்றி சிறப்பித்து இருக்கிறார்கள். இந்த காணொளி இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM