நத்தார் தினத்தை முன்னிட்டு முதற்தடவையாக 567 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சாதராண குற்றங்களை புரிந்தவர்கள் மற்றும் குற்றங்களுக்கான தண்டப்பணத்தை செலுத்தமால் சிறையில் இருந்த கைதிகளுக்கே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

குறித்த கைதிகளில் 7 பெண்களும் அடங்குவதாகவும்,  நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு விசேட ஏற்பாடுளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.