சந்தானம் நடிக்கும் 'கிக்' படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

Published By: Ponmalar

02 Feb, 2023 | 11:48 AM
image

சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கிக்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அழகே அழகே ..' எனத் தொடங்கும் மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

கன்னடத்தின் முன்னணி இயக்குநரான பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய தமிழ் திரைப்படம் 'கிக்'. இது சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ஹோப் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை ராகினி திரிவேதி, பிரம்மானந்தம், தம்பி ராமையா, கோவை சரளா, மனோபாலா, மதன்பாப், வை.ஜி. மகேந்திரா, செந்தில், வையாபுரி, ஷகிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுதாகர் எஸ். ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அர்ஜுன் ஜென்யா இசையமைத்திருக்கிறார். 

பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்ச்சூன் ஃபிலிம்ஸ் என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நவீன் ராஜ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இரண்டு பாடல்கள், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. 'பத்து முறை ..' எனும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத,  பாடகர் அர்மான் மாலிக் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். மெல்லிசையும், காதலும் கலந்து தயாராகி இருக்கும் இந்த பாடலை இணைய தலைமுறையினர் ரசித்து கேட்டு, வைரலாக்கி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right