விமல், டலஸ், பீரிஸ் அணியினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - சாகர காரியவசம்

Published By: Digital Desk 5

02 Feb, 2023 | 12:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவன்ச அணியினர்,டலஸ்,ஜி.எல் பீரிஸ் அணியினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹெலிகொப்டர் நெலும் மாவத்தையிலும், மெதமுலனயிலும்  இனி தரையிறங்காது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்களின் பிரதிநிதிகளுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (01) இரவு பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகவே உள்ளோம்.வெற்றி,தோல்வியை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு கிடையாது ஏனெனில் பொதுஜன பெரமுன நாட்டுக்கு சேவையாற்றியுள்ளது.

யார் நாட்டுக்கு சேவை செய்தார்கள்,யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை இருமுறை சிந்தித்து மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்தவர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் தமது சுய அரசியல் இலாபத்திற்காக பொருளாதார நெருக்கடியை அரசியல் நெருக்கடியாக்கி 69 இலட்ச மக்களாணையை காட்டிக் கொடுத்தார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் அணியினர்,டலஸ் மற்றும் ஜி.எல் பீரிஸ் அணியினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியதால் கட்சி செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

அரசாங்கத்தையும்,பொதுஜன பெரமுனவையும் விமர்சித்துக் கொண்டு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலானோர் தேசிய பட்டியல் உறுப்பினர்கள்.பொதுஜன பெரமுனவிற்கு புண்ணியம் கிடைக்கும் வகையில் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு சென்றதை மறந்து விட்டார்கள்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பொதுஜன அமோக வெற்றிப் பெறும்.பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்ள பெரும்பாலானோர் முரண்பட்டுக் கொண்டார்கள்.பொதுஜன பெரமுன கிராமத்திற்கு சேவையாற்றியுள்ளது,ஆகவே நிச்சயம் வெற்றிப்பெறுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி :...

2023-03-23 16:37:54
news-image

7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ...

2023-03-23 16:49:28
news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57