ரூ.20,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்கும் முடிவை திரும்பப்பெற்றது அதானி குழுமம்!

Published By: Rajeeban

02 Feb, 2023 | 11:16 AM
image

பங்கு வெளியீட்டில் திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்குதாரர்களுக்கே திருப்பி அளிக்கப்படும் அதானி குழுமம் அறிவித்துள்ளது.ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 15-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ பங்கு வெளியீட்டில் திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாயை பங்குதாரர்களுக்கே திருப்பி அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான நிலையிலும் பங்குகள் வேண்டி விண்ணப்பித்த பங்குதாரர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதானியின் சந்தை மதிப்பு குறைந்துவரும் நிலையில்இ இந்திய அளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேநேரத்தில்இ உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் ஒன்பதாம் இடம் பிடித்துள்ளார்.ழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் அதானி குழுமத்தைச் சார்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் வலுவாக காட்டுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. அதிகபட்சமாக 20 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. அதுமட்டுமல்லாமல் அதானியின் சொத்து மதிப்பும் மிகப் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இந்நிலையில் 20இ000 கோடி மதிப்புடைய பங்கு விற்பனை ரத்து (குPழு) செய்யப்பட்டுள்ளதாக நேற்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் பணம் திரும்ப அளிக்கப்படும் என்று அதானி குழும தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வீடியோ வழியாக கெளதம் அதானி பேசியுள்ளார். அந்த வீடியோவில் அதானி கூறியிருப்பதாவது: இப்போது பங்கு விற்பனையை தொடர்வது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. என்னை பொறுத்தவரை முதலில் முதலீட்டளர்கள் நலனுக்குக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே இந்த பங்கு விற்பனை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு நிறுவனத்தின் செயல்பாடுகளிலோ எதிர்கால திட்டங்களிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

எங்களின் வரிக்கு பிந்தைய வருமானம் நிறுவனங்களில் பண சுழற்சி ஆகியவை மிகவும் வலுவாக இருக்கின்றன. கடந்த காலங்களில் கடனை சரியாக கையாண்டுள்ளோம். நீண்ட கால நோக்கில் சந்தை மதிப்பையும் வளர்ச்சியையும் அதிகப்படுத்தும் செயல்பாடுகளை தொடரவுள்ளோம். இவ்வாறு தனது வீடியோவில் கெளதம் அதானி குறிப்பிட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17