வெயாங்கொடை பகுதியில் வைத்து உதம்விட சமரே என அழைக்கப்படும் பாதாளகுழு உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாகிச்சூட்டு சம்பவம் நேற்று வெயாங்கொடை ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெப் ரக வாகனமொன்றில் வந்தவர்கள் குறித்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.