வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

Published By: Vishnu

01 Feb, 2023 | 06:36 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ள மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2023 சுற்றுப் போட்டி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் எதிர்வரும் 4ஆம், 5ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினங்களில் முதல் சுற்றப் போட்டிகள் நடைபெறுவதுடன் இரண்டு தினங்களிலும் காலை 8.00 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து பெப்ரவரி 10, 11, 12ஆம் திகதிகளில் இறுதிச் சுற்றும் நடைபெறும்.

இந்த சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் அணிகள் பங்குபற்றுகின்றன.

இம்முறை 49 ஆடவர் அணிகளும் 13 மகளிர் அணிகளும் விளையாடவுள்ளன. இளமை பருவத்தில் அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தி போட்டித்தன்மை மிக்க விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீர, வீராங்கனைகளை உற்சாப்படுத்தி அவர்ளை தேகாரோக்கியத்துடனும் மன மகிழ்வுடனும் இருக்கச் செய்வதே இந்தப் போட்டி நடத்தப்படுவதன் முழு நோக்கம் என இலங்கை மாஸ்டர்ஸ் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரும் முன்னாள் தேசிய விருமான ஜயந்தன் ஜீவரட்னம் தெரிவித்தார்.

கஜா ஸ்போர்ட்ஸின் அனுசரணையுடன் நடத்தப்படும் இந்த சுற்றப் போட்டியின் முதல் இரண்டு தினங்களில் 46 போட்டிகள் நடைபெறவுள்ளன.

30 வயதுக்கு மேல், 35 வயதுக்கு மேல், 40 வயதுக்கு மேல், 45 வயதுக்கு மேல், 50 வயதுக்கு மேல், 55 வயதுக்கு மேல் ஆகிய பிரிவுகளில் ஆண்களுக்கும் 30 வயதுக்கு மேல், 35 வயதுக்கு மேல், 40 வயதுக்கு மேல், 45 வயதுக்கு மேல் ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும்.

30 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் பங்குபற்றும் 18 அணிகள் 4 குழுக்களில் விளையாடும். ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

35, 40 ஆகிய வயதுக்கு மேற்பட்ட பிரிவுகளில் பங்குபற்றும் 10 அணிகள் இரண்டு குழுக்களில் மோதும். அவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாடும்.

45, 50, 55 ஆகிய வயதுக்கு மேற்பட்ட பிரிவுகளில் தலா 6 அணிகள் பங்குபற்றவுள்ளன. அவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

பெண்களுக்கான ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்