வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன் சென்றவர் விபத்தில் சிக்கி இருவரும் பலி!

Published By: Vishnu

01 Feb, 2023 | 04:14 PM
image

தம்புள்ளை – குருணாகல் வீதியில் கொகரெல்ல வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மல்சிறிபுர நீரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ரத்நாயக்க என்பவரும் 62 வயதான பெண்ணுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியைப் பார்ப்பதற்காக தனது தாயுடன் 36 வயதான நபர் சென்று கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து கொழும்பிலிருந்து ஹொரவபத்தானை நோக்கி பயணித்த  பஸ்ஸுடன் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில்  தெரிய வந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இ.போ.ச சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23
news-image

மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற...

2023-03-23 13:32:04
news-image

அம்பாறையில் புடவைக்கடையில் தீ விபத்து

2023-03-23 11:47:29
news-image

சமாதானம், நல்லிணக்கத்திற்கான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச்...

2023-03-23 15:59:03
news-image

வாய்மூல விடைக்கான கேள்விகளை காணி வழக்கு...

2023-03-23 12:23:34