'தளபதி 67' அப்டேட்

Published By: Ponmalar

01 Feb, 2023 | 04:41 PM
image

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படமான 'தளபதி 67' எனும் திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'மாஸ்டர்' திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் விஜய் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது வட இந்திய நகரான ஸ்ரீ நகரில் நடைபெறுகிறது. இதற்காக 180 க்கும் மேற்பட்ட படக்குழுவினர் பிரத்யேக விமானத்தில் சென்னையிலிருந்து ஸ்ரீநகருக்கு சென்றிருக்கிறார்கள்.

  

  

இந்நிலையில் படத்தில் நடிக்கும்  நடிகர்கள் பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. நடிகை பிரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநரும், நடிகருமான மிஷ்கின், பொலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி என இப்படத்தில் நடிக்கும் கலைஞர்களின் பட்டியலை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகின் நம்பிக்கை தரும் படைப்பாளியான லோகேஷ் கனகராஜும், திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தியான தளபதி விஜயும் மீண்டும் இணைந்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right