வ. கௌதமனின் 'மாவீரா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Ponmalar

01 Feb, 2023 | 04:06 PM
image

தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மாவீரா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'கனவே கலையாதே', 'மகிழ்ச்சி' ஆகிய படத்தை இயக்கிய இயக்குநர் வ. கௌதமன் நடித்து இயக்கும் புதிய திரைப்படம் 'மாவீரா'. வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை விகே புரொடக்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் தருணத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் கௌதமனின் ஆக்ரோஷமான தோற்றமும், கையில் அம்பும், கத்தியும் என ஆயுதமேந்திருக்கும் பாணியும், பின்னணியில் கிராமத்துக் காவல் தெய்வமான அய்யனாரின் பிரம்மாண்ட தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right