ஊர்வசி 700

Published By: Ponmalar

01 Feb, 2023 | 04:07 PM
image

சிறந்த குணச்சித்திர நடிகையான ஊர்வசி, 'அப்பத்தா' எனும் படத்தில் நடித்ததன் மூலம், அவருடைய திரையுலக பயணத்தில் 700 ஆவது திரைப்படத்தை நிறைவு செய்ததற்காக திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் 'முந்தானை முடிச்சு' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமானவர் நடிகை ஊர்வசி. 'முந்தானை முடிச்சு' படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், அர்ஜுன், சரத்குமார் ஆகிய முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தற்போது 'காசேதான் கடவுளடா', 'அந்தகன்', 'ஜே. பேபி', 'யானை முகத்தான்' ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் 'அப்பத்தா' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தில் 700 ஆவது திரைப்படத்தை நிறைவு  செய்திருக்கிறார். அவரது இந்த பயணத்தை தென்னிந்திய திரையுலகினைச் சார்ந்த பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கன்னத்தில் குழி விழும் அளவிலான சிரிப்பு, வசனத்தை உச்சரிக்கும் போது பிரத்யேக பாணி, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அனாயசமாக நடிக்கும் திறன்... என பன்முகத் திறமை பெற்றக் கலைஞரான இவரை ரசிகர்கள், ' பொம்பள கமல்' என அன்புடன் ஒப்பிடுகிறார்கள். மூத்த இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'அப்பத்தா' எனும் திரைப்படம், அண்மையில் மும்பையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதன் போது அவ்விழாவில் பங்குபற்றிய சிறப்பு அதிதிகள் உள்ளிட்ட பலரும் அப்பத்தாவாக நடித்திருந்த ஊர்வசியின் நடிப்பை வியந்து பாராட்டினர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்திருக்கும் இவர் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞரும் கூட. நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி தொடரிலும், வலைதள தொடரிலும் நடித்திருக்கிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றிருக்கும் இவர், விரைவில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜெய் நடிக்கும் 'லேபிள்' எனும் இணையத்...

2023-03-25 13:30:04
news-image

‘பொன்னியின் செல்வன் 2' படத்தின் முன்னோட்டம்...

2023-03-25 13:22:11
news-image

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் மனோஜ் பாரதிராஜா

2023-03-25 13:01:41
news-image

'மாவீரன் பிள்ளை' திரைப்படத்தின் இசை வெளியீடு

2023-03-25 12:48:16
news-image

'வசீகரா...' பாடல் புகழ் பாடகி பாம்பே...

2023-03-24 17:00:01
news-image

செங்களம் - இணைய தொடர் விமர்சனம்

2023-03-24 16:01:08
news-image

விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முதற்கட்ட...

2023-03-24 15:59:17
news-image

நடிகர் அஸ்வின் நடிக்கும் 'பீட்சா 3'...

2023-03-24 13:08:36
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு' படத்தின்...

2023-03-24 13:37:10
news-image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி'...

2023-03-24 13:38:00
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் 'தீராக் காதல்'...

2023-03-24 13:50:05
news-image

குழந்தைகளுக்கு தொடுதல் பற்றி பெற்றோர்கள் தொடர்ந்து...

2023-03-23 16:51:38