இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 9 ஆவது இடம்

Published By: T. Saranya

01 Feb, 2023 | 03:18 PM
image

2023 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட  50 இடங்களின் பட்டியலில் இலங்கை ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் உலகளவில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட  முதல் பத்து இடங்களுக்குள் இலங்கை மாலைதீவுகள், டோக்கியோ, சிட்னி மற்றும் ஐஸ்லாந்து போன்ற ஃபோட்டோஜெனிக் தளங்களை விஞ்சியயுள்ளதாக உலகளாவிய பயண இணையத்தளமானபிக் 7 ட்ரவலின் (Big 7 Travel) தகவல் வெளியிட்டுள்ளது.

இத்தாலியின் மிலன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து லண்டன், பாரிஸ், இஸ்தான்புல், நியூயோர்க், நேபாளம், சிக்காகோ, பாலி மற்றும் இலங்கை, சிட்னி முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பிக் 7   தளம் பிக் 7 மீடியாவின் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் உலகளாவிய ஆசிரிய குழுவின் மாதிரி  கணக்கெடுப்புடன், ஒவ்வொரு இலக்குக்கான ஹேஷ்டேக்குகள் மற்றும் டிக்டொக் பார்வையார்களின் எண்ணிக்கையை பகுப்பாய்வு செய்யும் மதிப்பெண் முறை அடிப்படையில் உலகின் 50 இன்ஸ்டாகிராம் இடங்களின் பட்டியலை ஒன்றாக உருவாக்குகிறது.

பின்னர் அவர்கள் தங்கள் காட்சி அழகு மற்றும் சமூக ஊடகங்களில் பிரபல்யம் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதி முடிவுகளை வரிசைப்படுத்துகிறார்கள்.

அதன்படி, 13 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் ஹேஷ்டேக்குகள் மற்றும் 16.4 பில்லியன் டிக்டொக் பார்வையாளர்களை கொண்ட இலங்கை, பாரம்பரியத்தின் சின்னமான சிகிரியா குன்று முதல் தென் கடற்கரையின் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் வரை கலாச்சார, இயற்கை மற்றும் வரலாற்று ஈர்ப்புகளின் தனித்துவமான கலவையை வழங்குகிறது.

இந்நிலையில், சுற்றுலா அமைச்சும் அண்மைய மாதங்களில் இலங்கையை மேம்படுத்துவதில் பல்வேறு நிகழ்வுகளை நடாத்துவதுடன், நாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு பல நன்மைகளையும் வழங்குவதில் பங்கு வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56