பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும் உரியவாறு அமுல்படுத்தப்பட்டது - ஐ. நா. வின் கேள்விகளுக்கு இலங்கை பதில்

Published By: Digital Desk 5

01 Feb, 2023 | 10:58 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய மதிப்பீடு தொடர்பான குழுவினால் கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மீளாய்வைத் தொடர்ந்து, உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள், கொவிட் - 19 வைரஸ் பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை முகங்கொடுத்திருக்கின்றபோதிலும், அம்மீளாய்வின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட 177 பரிந்துரைகளையும், சுயமாக மேற்கொள்ளப்பட்ட 12 தீர்மானங்களையும் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய கால மதிப்பீடு தொடர்பான குழு புதன்கிழமை (01) மீளாய்வை மேற்கொண்டது. 

இம்மீளாய்வுக்கென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை தொடர்பில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருந்ததுடன், மனித உரிமைகள் விவகாரத்தில் அதன் நடவடிக்கைகள் குறித்து இலங்கையிடமிருந்தும் அறிக்கை கோரப்பட்டிருந்தது. 

அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின்போது முன்வைக்கப்பட்ட 230 பரிந்துரைகளில் இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 177 பரிந்துரைகள் மற்றும் சுயமாக மேற்கொள்ளப்பட்ட 12 தீர்மானங்களின் அமுலாக்கம் பற்றிய தகவல்களை உள்ளடக்கி இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையானது கடந்த 2017 ஆம் ஆண்டின் பின்னரான மீளாய்வு காலப்பகுதியில் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள், கொவிட் - 19 வைரஸ் பரவல் மற்றும் தீவிர பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. அவ்வாறிருப்பினும்கூட ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

அதன்படி அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சில முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 

அதேபோன்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய திருத்தங்கள் அடங்கிய ஆவணம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பான சட்ட நிறைவேற்றம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் உருவாக்கம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச பிரகடனங்கள் மற்றும் சட்டங்களுக்கு அமைவாகச் செயற்படுவதற்கான இணக்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள், அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் வலுவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நகர்வுகள் இலங்கையினால் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோன்று கொவிட் - 19 பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு மத்தியிலும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதில் இலங்கை வலுவான முன்னேற்றத்தைப் பதிவுசெய்தது. அதன்படி 163 நாடுகளில் 70.0 என்ற புள்ளியுடன் இலங்கை 76 ஆவது இடத்தைப்பிடித்தது. 

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் உபகட்டமைப்புக்கள் மற்றும் முகவரமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதை முன்னிறுத்தியும் காலநிலைமாற்ற சவால்களை திறம்பட எதிர்கொள்வதை  இலக்காகக்கொண்டும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று அந்த 19 பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:22:13
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35