உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது - நாமல்

Published By: Digital Desk 5

01 Feb, 2023 | 10:59 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் நிதி நிலைமையை கருத்திற் கொண்டு தேர்தல் தொடர்பில் அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கட்சி என்ற ரீதியில் எமக்கு கிடையாது.அரசியலமைப்பின் பிரகாரம் காலத்திற்கு காலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,ஆகவே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்.

நாட்டின் நிதி நிலைமையை கருத்திற் கொண்டு தேர்தல் தொடர்பில் அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது,இது கிராமிய தேர்தல்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கிராமிய பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது.கொவிட் பெருந்தொற்று காலத்தில் பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டது.

நாடு தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் தேர்தலை நடத்துவது தொடர்பில் சமூகத்தின் மத்தியில் மாறுப்பட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.அனைத்து கருத்துகளுக்கும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்று பின்னணியை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.பொய்யான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்து அதனுடாக பிரபல்யமடையும் கொள்கையில் இருந்துக் கொண்டு மக்கள் விடுதலை முன்னணி செயற்படுகிறது.

மக்கள் விடுதலை முன்னணியின் போலியான குற்றச்சாட்டுக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.வெற்றி,தோல்வி இதனை நாட்டு மக்களே தீர்மானிப்பார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23
news-image

மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற...

2023-03-23 13:32:04
news-image

அம்பாறையில் புடவைக்கடையில் தீ விபத்து

2023-03-23 11:47:29
news-image

வாய்மூல விடைக்கான கேள்விகளை காணி வழக்கு...

2023-03-23 12:23:34
news-image

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்குமாறு...

2023-03-23 11:33:42
news-image

மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தப்பட்ட புரு மூனா!  

2023-03-23 11:28:34