ஆரம்ப காலங்களில் பருவம் அடைந்த பெண்கள் தாவணி அணியும் வழக்கத்தை பின்பற்றினர். நவ நாகரிக மோகம் மேற்கத்திய ஆடைகளை நாட வைத்ததன் காரணமாக தாவணி அணியும் வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது.
சடங்கு, சம்பிரதாயத்திற்காக மட்டும் தாவணி அணியும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.
எனினும் இன்றும் கிராமங்களில் தாவணி அணியும் இளம் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாரம்பரிய ஆடையான இதனை சுப நிகழ்வுகளின்போது அணிந்து கொள்வதற்கு சில இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இன்றைய ஃபெஷன் உலகில் தாவணி ஏன் அணிய வேண்டும் என்பதற்கான காரணங்கள்:
இளமை :
பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள். அதற்கேற்ப இது இளமை உணர்வை வெளிப்படுத்தக்கூடியது. டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது. சேலையை போல் தாவணி முதிர்ச்சியான தோற்றத்தை கொண்டிருக்காது. நடிகைகள் கூட பல சந்தர்ப்பங்களில் தாவணி அணிய விரும்புகிறார்கள்.
செளகரியம் :
சேலையை விட தாவணி அணிந்து கொண்டு நடப்பதற்கு செளகரியமாக இருக்கும். நவ நாகரிக உடையை போல் இறுக்கமாக உடுத்த வேண்டியதிருக்காது. தாவணிக்கு பொருத்தமாக உடுத்தப்படும் பாவாடை தளர்வாக இருக்கும். துப்பட்டாவும் அசெளகரியத்தை கொடுக்காது. நேர்த்தியாக இருக்கும். இப்போது படங்களில் நடிகைகள் தாவணி அணிவது பேஷனாகி இருக்கிறது.
ஸ்டைல் :
தாவணி பாரம்பரியமான பழைய ஆடை என்றாலும், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப உருமாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் தாவணியை ஸ்டைலாக அணியலாம். நேர்த்தியான தோற்றத்தையும் பெற முடியும். பாவாடை, ரவிக்கையின் நிறம், தாவணியின் நிறம் என ஒவ்வொன்றின் தேர்விலும் இன்றைய /பெஷன் உலகுக்கு ஈடு கொடுக்கும் அம்சங்கள் உள்ளன. ஃபெஷன் டிசைனர்களும் நடிகைகள் உடுத்துவதற்கு ஏற்ப ஸ்டைலிஷான வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
பாரம்பரியம் :
திருமண விழாவிலோ அல்லது கோவில் திருவிழாவிலோ பாரம்பரிய உடை உடுத்த விரும்பும் இளம் பெண்களுக்கு தாவணி பொருத்தமான தேர்வாக இருக்கும். பட்டு துணிகளிலும் தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. உடுத்தும் ஆடைக்கு ஏற்ப ஒப்பனை செய்வதன் மூலம் பளிச் தோற்றத்தில் மிளிரலாம். பாரம்பரிய நகைகள் அணிவதும் கூடுதல் பொலிவு சேர்க்கும்.
தனித்துவம் :
சுப நிகழ்வுகளுக்கு சுடிதார், லெஹெங்கா போன்ற ஆடைகளுக்கு மாற்றாக நேர்த்தியாக தாவணி அணிந்து சென்றால் கூட்டத்தில் நீங்கள் தனித்து தெரிவீர்கள். நவ நாகரிக ஆடைகள் பிரமாண்டமாக காட்சி அளித்தாலும் தாவணியுடன் ஒப்பிடும்போது மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் ஈர்க்கப்படும். தங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ள ஆப் சாரி (Half Saree) என்று அழைக்கப்படும் தாவணி எப்போதுமே சிறந்த தேர்வாக அமையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM