பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி இராஜினாமா

Published By: Digital Desk 5

01 Feb, 2023 | 02:38 PM
image

(என்.வீ.ஏ.)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான விளையாட்டுத்துறை பணிப்பாளர் ஜியேன் பிலிப் கேஷியன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு 18 மாதங்களே இருக்கின்ற நிலையில் கேஷியன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களைக் காட்டி அவர் விலகிக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்குப் பதிலாக அப் பதியை விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளுக்கான நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் பிரதி விளையாட்டுத்துறை பணிப்பாளர் ஒரேலி மேர்ல் தொடரவுள்ளார். ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஏற்பாட்டுக் குழுவில் 2018இல் மேர்ல் இணைந்தார்.

ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்துவதற்கான உரிமைத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட குழுவில் 2015இலிருந்து விளையாட்டுத்துறை பணிப்பாளராக ஜியேன் பிலிப் கேஷியன் நியமிக்கப்பட்டதுடன் அக் குழுவில் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

உரிமைத்துவத்துக்கான கோரலுக்கு முன்னர் பாரிஸ் 2024 தலைவர் டோனி எஸ்டெங்குவே உட்பட மற்றும் பல முக்கிய அதிகாரிகளுடன் இணைந்து கேஷியன் பல்வேறு செயலமர்வுகளை நடத்தியிருந்தார்.

பாரிஸ் 2024 ஏற்பாட்டுக் குழுவில் மிக முக்கிய பங்காற்றிய அவர் பதவி விலகியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என ஏற்பாட்டுக் குழு வட்டாரம் ஒன்று தெரிவித்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்