அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டது

Published By: Sethu

01 Feb, 2023 | 02:55 PM
image

அவுஸ்திரேலியாவில் 2 வாரங்களுக்கு மேல் காணாமல் போயிருந்த, ஆபத்தான கதிரியக்கப் பொருள் கொண்ட சிறிய கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

8 மில்லிமீற்றர் நீளமும் 6 மில்லிமீற்றர் அகலமும் கொண்ட இச்சிறிய கொள்கலனில், சீசியம்-137 எனும் கதிரியக்கப் பொருள் இருந்ததாக மேற்கு அவுஸ்திரேலிய  சுகாதாரத் திணைக்களம் தெரிவித்திருந்ததுசுரங்க நடவடிக்கைகளுக்காக இது பயன்படுத்துபட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி கொள்கலன் கதிரியக்கத்தினால் எரிகாயங்கள் அல்லது நோய்கள் ஏற்படலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்திலுள்ள சுரங்கப் பணிக்காக 1400 கிலோமீற்றர் தூரம் கொண்ட  பயணத்தின்போது கடந்த 12 -16 ஆம் திகதிகளுக்கு இடையில் இக்கொள்கலன் காணாமல் போயுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது

இக்கொள்கலனானது, லொறி ஒன்றிலிருந்து விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் இக்கொள்கலன்  வீதியோரமொன்றிலிருந்து 2 மீற்றர் தூரத்தில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

இத்தேடுதல் நடவடிக்கைக்காக கதிரியக்கத்தை கண்டறியும் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13