பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும் மனஉளைச்சல் - துணிந்து குரல்கொடுத்த இரு அவுஸ்திரேலிய சகோதரிகள்

Published By: Rajeeban

01 Feb, 2023 | 12:41 PM
image

பாலியல் துஸ்பிரயோகங்களிற்குள்ளானவர்கள்( சிறுவர்கள்) விசாரணை என்ற பெயரில் நீதிமன்றங்களில் எதிர்நோக்கும் அவலங்கள் மன உளைச்சல் குறித்து கவனத்தை திருப்பிய இரு சகோதரிகளிற்கான ஆதரவு அவுஸ்திரேலியாவில் அதிகரித்து வருகின்றது.

ரோஸ் பிப்பாஸ்மில்ஸ்தோர்ப் என்ற இரு சகோதரிகள் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகங்களிற்குள்ளான நிலையில் நீதிமன்றத்தில் தாங்கள் எதிர்கொண்ட மன உளைச்சல் குறித்து வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.

பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் குறிப்பாக சிறுவர்கள் நீதிமன்றில் எதிர்கொள்ளும் அவலங்கள் குறித்து உலகின் கவனத்தை அவர்கள் ஈர்த்தனர்

இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளமொன்று நீதி காயப்படுத்தக்கூடாது என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தது.

ஏற்கனவே சிறுவயதில் பாலியல் வன்முறைக்குள்ளான பின்னர் நீதிமன்றில் மிகவேதனையை அனுபவித்த அல்பரி சகோதரிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்தே  இந்த பிரச்சாரம் ஆரம்பமானது.

நாங்கள் மிகவும் மன உளைச்சலை எதிர்கொண்டோம் அது இன்று வரை நீடிக்கின்றது என அவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சிறுவர் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களிற்கு என தேசிய ரீதியில் சிறுவர் பாலியல் குற்ற ஆதார திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்ற வேண்டுகோள்கள் வெளியாகியுள்ளன.

நியுசவுத்வேல்ஸ் பிரதமர் ஜூன் மாதம் இந்ததிட்டம் தனது மாநிலத்தில் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஏனைய மாநில தலைவர்களுடன் இது குறித்து கலந்தாலோசனைகளை மேற்கொண்டு சகவமாநிலங்களிற்கும் விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சமூக ஊடகங்களில் சகோதரிகளின் செயற்பாட்டிற்கு ஆதரவு  அதிகரித்து வருகின்றது.

அற்புதமான அருமையான இரண்டு பெண்களின் மிகச்சிறந்த நடவடிக்கை என ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஆஹா இது உத்வேகம் அளிக்கிறது. பாலியல் துஷ்பிரயோகம் ஒருபோதும் சரியில்லை, பொறுத்துக் கொள்ளக் கூடாது,” என்று மற்றொருவர் பதிவிட்டு, : “ஆஹா! நீங்கள் பெண்கள் அற்புதம்! உண்மையான சூப்பர் ஹீரோக்கள்”. ️என ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலிய ஊடகத்தின் பிரச்சார நடவடிக்கையில் பதிவிட்டுள்ள தேசிய ரீதியில் சிறுவர் பாலியல் குற்ற ஆதார திட்டத்தினை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சகோதரிகளை செவிமடுத்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வருவது மிகச்சிறந்த செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமரோடு பானிபூரி உண்ட ஜப்பான்...

2023-03-22 17:25:44
news-image

மோடிக்கு எதிராக சுவரொட்டி : 6...

2023-03-22 15:45:06
news-image

சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது...

2023-03-22 14:08:01
news-image

பிரேஸில் அரச தொழில்களுக்கு 30% கறுப்பின...

2023-03-22 12:24:44
news-image

உக்ரேனுக்கு 15.6 பில்லியன் வழங்குகிறது ஐஎம்எவ்:...

2023-03-22 11:01:11
news-image

நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க...

2023-03-22 10:46:57
news-image

வாகனங்கள், உடைகளை மாற்றி அம்ரித்பால் சிங்...

2023-03-22 10:36:46
news-image

ஓரின சேர்க்கையாளர்களை சிறையிலடைக்கும் சட்டமூலத்துக்கு உகண்டா...

2023-03-22 09:43:06
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : பாகிஸ்தானிலும் இந்தியாவிலும்...

2023-03-22 08:56:00
news-image

மெக்ஸிக்கோவில் வானவேடிக்கை தயாரிக்கப்பட்ட வீட்டில் வெடிப்புச்...

2023-03-21 18:01:43
news-image

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு சீன...

2023-03-21 16:59:27
news-image

ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா உக்ரேனுக்கு...

2023-03-21 16:57:48