(எம்.மனோசித்ரா)
தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் பெண் வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பெப்ரல் அமைப்பு விசேட பிரிவினை நிறுவியுள்ளதோடு, அதற்கான தொலைபேசி இலக்கங்களையும் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலின் ஊடாக மக்களின் வாக்குரிமையை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் பெப்ரல் அமைப்பு அரச சொத்துக்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குதல், பொருட்கள் வழங்குதல், குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரித்தான சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துதல், புதிய நியமனங்களை வழங்குதல், இடமாற்றங்களை வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கண்காணித்து வருகிறது.
அதற்கமைய ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ளூராட்சி மன்றங்களிலோ அல்லது தொகுதிகளிலோ இவ்வாறான தேர்தல் சட்ட மீறல்கள் இடம்பெற்றால், அவை தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அனுபவம் வாய்ந்த சட்டத்தரணிகளை உள்ளடக்கி எம்மால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இதற்கான பிரிவில், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் முறைப்பாடளிப்பதன் மூலம் அவற்றுக்கான துரித தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோன்று பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும்போது எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
075-8989120 என்ற இலக்கத்துக்கு பெண் வேட்பாளர்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.
அதற்கமைய 011-2558570, 011-2558571, 075-3505245, 075-8989104 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்தும் முறைப்பாடளிக்கலாம்.
அத்தோடு 011-25585572, 011-2558579 ஆகிய தொலைநகல் இலக்கங்களுக்கும், slgelection2023@.gmail.com, tlgelection2023@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM