உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹு தெரிவிப்பு

Published By: Sethu

01 Feb, 2023 | 12:16 PM
image

உக்ரேனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவது குறித்து தான் சிந்திப்பதாகவும் உக்ரேன் விவகாரத்தில் ஒரு மத்தியஸ்தராக செயற்பட விரும்புவதாகவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறியுள்ளார். 

ரஷ்யாவுடன் இஸ்ரேல் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. இஸ்ரேலின் அயல்நாடான சிரியாவின் வான் பரப்பை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும் ரஷ்யா கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், சிஎன்என் தொலைக்காட்சிக்கு நெத்தன்யாஹு நேற்று அளித்த செவ்வியொன்றில், ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட அமெரிக்கத் தொழில்நுட்பத்துடனான அயர்ன்டோம் வான் பாதுகாப்பு பொறிமுறை போன்றவற்றை உக்ரேனுக்கு இஸ்ரேல் வழங்குமா என கேட்கப்பட்டது.

அப்போது, நிச்சயமாக நாம் இதை ஆராய்கிறோம்' என நெத்தன்யாஹு பதிலளித்தார். 

இஸ்ரேலில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி ஆர்டிலெறிகளை யுக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக நெத்தன்யாஹு கூறினார்.

அதேவேளை, யுக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்படும், ஈரானினால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தான் இங்கு பட்டியலிடப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.

குறைந்த விலை ஆளற்ற விமானங்களை, உக்ரேன் மீதான படையெடுப்புக்காக ரஷ்யாவுக்கு ஈரான் விற்பனை செய்ததாக யுக்ரைனுக்கும் மேற்குலக நாடுகளும் கூறுகின்றன. ஆனால், இதை ஈரான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னர், உத்தியோகபூர்வமற்ற வகையில் மத்தியஸ்தர் பாத்திரம் வகிக்குமாறு தான் கோரப்பட்டதாகவும், ஆனால், அப்போது தான் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்ததால் அதை தன்னால் செய்ய முடியவில்லை எனவும் எனவும் நெத்தன்யாஹு கூறினார். 

எனினும், சம்பந்தப்பட்ட தரப்புகளும் அமெரிக்காவும் கோரினால் அதை தான் ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 12:56:28
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06