'அபே அம்மா’ (Ape Amma) யூடியூப் சேனல், இலங்கையில் அதிக வருமானம் ஈட்டும் யூடியூப் சேனலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
‘அபே அம்மா’ விளம்பர வருவாய் மூலம் மட்டும் 962 அமெரிக்க டொலர்களை சம்பாதிப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
உணவு தொடர்பான உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் ‘அபே அம்மா’, ஆசியா மற்றும் ஓசியானியாவில் சிறந்த யூடியூப் சேனல்களில் ஒன்றாகவும் தெரிவாகியுள்ளது.
சர்வதேச ரீதியில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, Cocomelon யூடியூப் சேனல் உலகில் அதிகம் பார்க்கப்படும், அதிகம் வருமானம் ஈட்டும் யூடியூப் சேனலலாக இடம்பிடித்துள்ளது.
2006 இல் உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் வீடியோக்களில் இருந்து 82.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திரட்டப்பட்டதன் மூலம், குழந்தைகளுக்கான சேனல் Cocomelon எல்லா காலத்திலும் அதிக வருமானம் ஈட்டும் யூடியூப் சேனலாகவுள்ளது.
குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட இந்த சேனல் 5 கண்டங்களில் அதிக இலாபம் ஈட்டும் சேனலாக தெரிவாகியுள்ளது.
ரஷ்யாவின் Like Nastya ($167.5m) மற்றும் ஆர்ஜென்டினாவின் El Reino Infantil ($102.2m) ஆகிய இரு சேனல்களும் இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன.
இதனையடுத்து 22 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன், அமெரிக்க யூடியூபர் FGTeeV எந்த கேமிங் சேனலையும் விட அதிகமாக சம்பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM