உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து இங்கிலாந்தை சந்திக்கிறது தென்னாபிரிக்கா

Published By: Digital Desk 5

01 Feb, 2023 | 12:27 PM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவில் இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு நேரடித் தகுதியைப் பெறும் குறிக்கோளுடன் இன்று புதன்கிழமை (01) நடைபெறவுள்ள மூன்றாவதும் கடைசியுமான ஐசிசி உலக கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் போட்டியில் இங்கிலாந்தை தென் ஆபிரிக்கா எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடும் தனது வாய்ப்பை பெரும்பாலும் தென் ஆபிரிக்கா  உறுதிசெய்துகொள்ளும். அப் போட்டியில் வெற்றி பெறும் அதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தென் ஆபிரிக்கா ஓவர்களை நிறைவு செய்யவேண்டும். தவிறினால் தண்டப் புள்ளியைப் பெற்று உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதியைப் பெறுவது தாமதப்படும்.

ஒருவேளை இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்தால் அதன் சொந்த மண்ணில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நெதர்லாந்துடனான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் முழுமையாக வெற்றிபெறுவது அவிசயமாகும்.

ஏனெனில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை வெற்றிபெற்றால் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் தென் ஆபிரிக்கா விளையாட நேரிடும்.

எனவே இன்றைய போட்டியிலும் தொடரும் நெதர்லாந்துடனான தொடரில் முழுமையாகவும் வெற்றிபெறுவதற்கு தென் ஆபிரிக்கா முயற்சிக்கவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா இருதரப்பு தொடரை ஏற்கனவே தனதாக்கிக்கொண்டுள்ளது.

இந் நிலையில், நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்து ஆறுதல் வெற்றியை ஈட்ட கடுமையாக முயற்சிக்கும்.

எனினும் இங்கிலாந்தின் அண்மைய ஒரு நாள் போட்டி முடிவுகள் திருப்திகரமாக இல்லாததால் இன்றைய போட்டியில் கடும் சவாலை எதிர்கொள்ளும்.

கடந்த வருடம் 12 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து 5 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வி அடைந்ததுடன் ஒரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.

மேலும் நடப்பு தொடர் உட்பட கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் இங்கிலாந்து தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. எனவே உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்கு முன்னர் இங்கிலாந்து சகல துறைகளிலும் முன்னேறத் தவறினால் உலக சம்பியன் பட்டத்தை தக்கவைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும்.

இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வெற்றிகொள்ள முயற்சிக்கவுள்ளதால் முதல் இரண்டு போட்டிகளைப் போன்று கடைசிப் போட்டியும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

அணிகள்

இங்கிலாந்து: ஜேசன் ரோய், ஃபில் சோல்ட், டேவிட் மாலன், ஹெரி ப்றூக், ஜொஸ் பட்லர் (தலைவர்), மொயீன் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் விலி, ஆதில் ராஷித், ஜொவ்ரா ஆச்சர்.

தென் ஆபிரிக்கா: ஜான்மன் மாலன் அல்லது ரீஸா ஹெண்ட்றிக்ஸ், டெம்பா பவுமா (தலைவர்). ரசி வென் டேர் டுசென், ஏய்டன் மார்க்ராம், ஹெய்ன்றிச் க்ளாசென், வெய்ன் பார்னல், சிசண்டா மகாலா, கேஷவ் மஹராஜ், தப்ரெய்ஸ் ஷம்சி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்க கத்தார்...

2023-03-23 12:08:50
news-image

முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ்....

2023-03-23 09:32:37
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47
news-image

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

2023-03-21 12:53:50
news-image

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ்...

2023-03-21 11:50:19
news-image

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

2023-03-21 09:47:45
news-image

19இன் கீழ் மும்முனை ஒருநாள் கிரிக்கெட்...

2023-03-21 09:18:28