ஒருவரது குறட்டை சத்தம் அந்த அறையில்- சில சமயங்களில் அந்த வீட்டில், யாரையும் தூங்க முடியாமல் செய்துவிடும். குறட்டை விடுவதால் அவர்களாலேயே தொடர்ந்து தூங்க முடியாது. அப்படி வரும் தூக்கமும் ஆழ்ந்த தூக்கமாக இருக்காது.
உடல் எடை அதிகரிக்கும்போதும், வயது ஏற ஏறவும் குறட்டை ஏற்படுகிறது. ஒருவித ஒவ்வாமையாலும் சைனஸ் பிரச்சினையாலும், மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச் சுவர் வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், தொண்டையில் உள்ள சதை தடிப்பதாலும் குறட்டை ஏற்படலாம்.
அதுவே குழந்தைகளுக்கு என்றால் டொன்சில் அல்லது அடினாய்டுகள் ஏற்படுவதால் உள்நாக்கு நீண்டு, காற்று செல்லும் வழியை தடுத்தாலும் குறட்டை ஏற்படலாம்.
பொதுவாகவே குறட்டை விடுபவர்களுக்கு தூக்கக்குறைவு ஏற்பட்டு, அடுத்த நாள் வேலைக்குச் செல்லும்போது அல்லது வேலையில் இருக்கும்போது கண்ணைச் செருகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
இதயத் தசைகள் விரிவடையும். சில வேளைகளில் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றுக்கும் இது காரணமாக அமையலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM