இந்தியா தொடர்ந்து தனது அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி, அதன் புதிய முக்கோணத்தை செயற்படுத்தி வருகிறது. மேலும், அந்நாட்டின் அணு ஆயுத உத்தி, பாரம்பரியமாக பாகிஸ்தானை மையமாக கொண்டது.
எனினும், இப்போது சீனாவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தோன்றுகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் 2022ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போதுள்ள அணுசக்தி திறன் கொண்ட விமானங்கள், நிலம் சார்ந்த விநியோக அமைப்புகள் மற்றும் நீர்மூழ்கி ஏவுகணைகளை நிரப்புவதற்கு அல்லது மாற்றுவதற்கு குறைந்தபட்சம் நான்கு புதிய ஆயுத அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியில் இந்தியா மற்றொரு சோதனையை நடத்துகிறது.
சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே ஐந்து முறை பறக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை தயாரிப்பதற்கான போட்டிக்கு மத்தியில், ஸ்க்ராம் ஜெட் இன்ஜின் மூலம் இயங்கும் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப டெமொன்ஸ்ட்ரேட்டர் வாகனத்தை இந்தியா சோதனை செய்துள்ளது.
அத்துடன் தற்போது எட்டு வெவ்வேறு அணுசக்தி திறன் கொண்ட அமைப்புகளை இயக்குகிறது. இரண்டு விமானங்கள், நான்கு தரைவழி ஏவுகணைகள் மற்றும் இரண்டு கடல் சார்ந்த ஏவுகணைகள் என்பன இவற்றுள் உள்ளடங்குகின்றன.
இந்தியா 'சுமார் 700 கிலோகிராம் (ப்ளஸ் அல்லது மைனஸ் 150 கிலோ) ஆயுதம் தரக்கூடிய புளுட்டோனியத்தை உற்பத்தி செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவை 138 முதல் 213 அணு ஆயுதங்களுக்கு போதுமானது என அது கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM