ஆலு பிரெட் டிக்கி

Published By: Ponmalar

01 Feb, 2023 | 11:20 AM
image

தேவையான பொருட்கள்: 

உருளைக்கிழங்கு – 4

பிரெட் ஸ்லைஸ் - தலா 5

மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மசாலா - தலா அரை டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும். 

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும். 

மசித்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நீரில் நனைத்து ஒட்டப் பிழிந்த பிரெட் ஸ்லைஸ், கொத்தமல்லி, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டவும். 

தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, தட்டிவைத்த டிக்கிகளை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும். இப்போது சூப்பரான ஆலு பிரெட் டிக்கி ரெடி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்