அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணம் ஹெம்ப்ஸ்டெட்நகரில் உள்ள லிடோ கடற்கரையில் திங்கட்கிழமை காலை இராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு திமிங்கலம் உயிருடன் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மீட்பு குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திமிங்கலத்தை மீட்டு கடலுக்குள் விடுவதற்காக அங்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் திமிங்கலம் இறந்துள்ளது.
இதனையடுத்து, மீட்பு குழுவினர் 35 அடி நீளம் கொண்ட அந்த ராட்சத திமிங்கலத்தை கிரேன் மூலம் கடற்கரையில் இருந்து நகர்த்தினர். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் திமிங்கலங்கள் இப்படி மர்மமான முறையில் இறந்து, கரை ஒதுங்குவது தொடர் கதையாகி வருகிறது. நியூயோர்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தையும் சேர்த்து, கடந்த 2 மாதத்தில் மட்டும் 15 திமிங்கலங்கள் செத்து, கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
படங்கள் ; Edmund J Coppa
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM