உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக வெல்வதற்கு அவுஸ்திரேலியா முயற்சிக்கும் - மென் லெனிங்

31 Jan, 2023 | 08:22 PM
image

(என்.வீ.ஏ.)

சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ள அவுஸ்திரேலியா, ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக உலக சம்பியனாவதற்கு முயற்சிக்கும் என அணித் தலைவர் மெக் லெனிங் தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவில் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 8ஆவது ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பாக ஐசிசி உத்தியோகபூர்வ இணையத்திற்கு கருத்து வெளியிட்டபோதே மெக் லெனிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகியன ஏ குழுவிலும் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன பி குழுவிலும் இடம்பெறுகின்றன.

போட்டியில் உள்ள உற்சாகம் ஒரு போதும் மறையப் போவதில்லை என 5ஆவது இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணித் தலைவி லென் மெனிங் குறிப்பிட்டுள்ளார்.

'நான் விளையாடப்போவது 5ஆவது ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியாக இருக்கலாம். ஆனால், என்னை நம்புங்கள். போட்டியில் உள்ள உற்சாகம் ஒருபோதும் மறைந்துவிடுவதில்லை. நானும் குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்களும் முதல் தடவையாக தென் ஆபிரிக்காவுக்கு செல்வது இதுவே முதல் தடவையாகும். அங்குள்ள சூழ்நிலைகள் எமக்கு ஒத்துவராவிட்டாலும் எம் முன்னே நிறைவேற்ற வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது. அது எமக்கு அதிர்ச்சி தருவதாக வரக்கூடும் என்பதல்ல. ஆனால், சம்பியன் பட்டத்தை தக்கவைக்க வேண்டும். எனவே தென் ஆபிரிக்காவில்சுற்றிப்பார்ப்பதைப் பிற்போடவேண்டும்' என லெனிங் கூறினார்.

'புதிய நாடொன்றில் புதிய சவால்கள் தோன்றும். குறிப்பாக அந்த நாட்டிற்கு ஏற்றவாறு எங்களைப் பழக்கப்படுத்திக்கொள்வது சவாலாகும். எமது ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தை பார்ள் விளையாட்ரங்கில் பெப்ரவரி 10ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளோம். பயிற்சியின்போதும் சரி போட்டியின்போதும் சரி சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்களை நாங்கள் மாற்றிக்கொள்வதுதான் எமக்கு பலம் சேர்ப்பதாக அமையும். கடைசியாக நடைபெற்ற உலக் கிண்ணத்திற்கு பின்னர் எமது குழாம் மாற்றம் அடைந்துள்ளது. நாங்கள் தொடர்ச்சியாக முன்னேறிவருகிறேம். துடுப்பாட்டத்திலும் சரி பந்துவீச்சிலும் சரி எமது அணியில் தற்போது பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கிறது.

'மெல்பர்னில் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஈட்டிய சாதனைமிகு வெற்றியை விட அதிசிறந்த வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் நாங்கள் தென் ஆபிரிக்கா செல்லவுள்ளோம். மெல்பர் கிரிக்கெட் அரங்கில் 86,000 இரசிகர்கள் முன்னிலையில் ஈட்டிய அந்த வெற்றி அனுபவம் உயிருள்ளவரை என்னோடு இருக்கும். எவ்வாறாயினும் இம்முறை எமக்கு கடும் சவால் காத்திருக்கிறது. ஆனால், மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக உலக சம்பியனானால் அது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும். எனவே அதற்கான முயற்சியில் இறங்குவோம்' என அவுஸ்திரேலிய அணித் தலைவி மெக் லெனிங் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்:...

2023-03-23 16:21:36
news-image

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்க கத்தார்...

2023-03-23 12:08:50
news-image

முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ்....

2023-03-23 09:32:37
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47
news-image

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

2023-03-21 12:53:50
news-image

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ்...

2023-03-21 11:50:19
news-image

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

2023-03-21 09:47:45