பெப்ரவரி மாத ராசி பலன்கள் 2023

Published By: Ponmalar

31 Jan, 2023 | 05:23 PM
image

மேஷம்

விரும்பியபடி எதையும் சாதித்துக் கொள்ளும் மேஷ ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்திலும், தனாதிபதி லாபஸ்தானத்திலும் அமர்ந்திருப்பது உங்களின் வாழ்வில் மேன்மையான நல்ல பலன்களை பெற்றுத் தரும். விரையாதிபதி குரு, ஆட்சி பெற்றிருப்பது சிலருக்கு புதிய செலவு வரலாம். தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி சனி, பஞ்சமாதிபதி சூரியனுடன் இணைவது உங்களின் வளமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் எதை செய்து வந்தால் வாழ்க்கை நலமுடன் இருக்கும் என்பதை அறிந்து, அதனை செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களின் புனித பயணம் சிறப்பாக இருக்கும். குறுகிய காலத்தில் முன்னேற்றம் பெற்று வளமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
13.02.2023 திங்கள் மாலை 04.42 முதல் 15.02.2023 புதன் இரவு 08.37 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:
அசுபதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
அரசாங்க காரியங்களில் உங்களின் முயற்சி நன்றாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்படுவதால் உங்களின் வாழ்வில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும்.

பரணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
எதையும் சாதித்து காட்ட வேண்டுமென்ற உங்கள் எண்ணம் நிறைவேறும். வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள்.

கார்த்திகை 1ம் பாதம்:
அரசியலிலும், உத்தியோகத்திலும் உங்களின் சேவை சிறப்பாக அமையும். குடும்பத்தில் சுபகாரியம் நன்றாக நடக்கும். கட்டிட சம்மந்தபட்ட தொழில் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
ஒரேஞ்ச், வெண்மை, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வெள்ளி, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்கு நவகிரக குருவுக்கு நெய் தீபமிட்டு கொண்டைகடலை நைவேத்யம் வைத்து வேண்டிக் கொள்ள, சகல காரியமும் வெற்றியை தரும்.

ரிஷபம்

விரும்பிய தொழிலில் முழு கவனமும் செலுத்தும் ரிஷப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் குருவும், தொழில் ஸ்தானத்தில் ராசிநாதனும் அமர்வதும், ராசியில் களத்திர காரகனும், சந்திரனும் அமர்ந்து உங்களுக்கு தொழிலிலும், உத்தியோகத்திலும் நல்ல தைரியத்தையும், மேன்மையை பெற்றுத் தருவார்கள். கலைத்துறையினருக்கு நல்ல புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம், ஏற்பாடுகள் நடக்கும். தன்னை நம்பியிருப்பவருக்கு முடிந்த அளவு உதவிகளைச் செய்வீர்கள். புதிய திட்டங்களுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உயர் நிலை கல்விக்கு சிலருக்கு ஆர்வம் உண்டாகும். தொலை நிலை கல்வி மூலம் மேற்படிப்பு பிடிப்பீர்கள். பெண்களின் வாழ்க்கை சூழ்நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். புத்திரர்களின் மூலம் சிலருக்கு புதிய செலவு உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள்:
15.02.2023 புதன் இரவு 08.38 முதல் 17.02.2023 வெள்ளி இரவு 11.20 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்:
நினைத்ததை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சொந்த தொழில் செய்ய நீங்கள் எடுக்கும் முயற்சி நல்ல பலனை தரும்.

ரோகிணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
எதையும் நேர்மையான வழியில் செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். தொழிலில் முன்பைவிட நல்ல முன்னேற்றமும். பொருளாதார வளமும் கிட்டும்.

மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள்:
சிந்தனை செய்து எதையும் செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி நெய் தீபமேற்றி சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள அனைத்து விடயங்களும் சிறப்பாக அமையும்.

மிதுனம்

வித்தியாசமாக எதையும் சிந்தித்து செயல்படும் மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் நீங்கள் பல இன்னல்களிலிருந்து விடுபட்டு வளம் பெறுவீர்கள். உங்களின் ராசிக்கு ராசிநாதன் பார்வை பெறுவதும் ஆயுள் ஸ்தானத்தில் மூன்றாமிட அதிபதியுடன் இணைவு பெறுவதால், உடல் பலமும், மன பலமும் பெறுவீர்கள். உங்களின் தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று தனஸ்தானத்தை பார்ப்பது உங்களுக்கு ஊக்கம் பெற்று, செய்யும் தொழில், பொருளாதாரத்தில் மேசப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சுயமுயற்சி மூலமாக நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். பொது விடயத்தில் ஆர்வம் இருந்தாலும் அதிகம் தலையீடுகளைக் குறைத்துக் கொள்வீர்கள். எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்படுவீர்கள். காரணத்தைத் தெரிந்து கொண்டுச் செயல்படுவதன் மூலம் எதையும் சிறப்பாக செய்து வளம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
17.02.2023 வெள்ளி இரவு 11.21 முதல் 19.02.2023 ஞாயிறு இரவு 07.35 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள்:
சகோதரர்களின் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். வீடு, நிலம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். காவல், ராணுவம் பணியில் சிறப்பாக செயல்படுவீர்கள்.

திருவாதிரை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
சிறு தடைகளை தாண்டி ஏணி படி போல பல விடயங்களில் மேன்மை அடைவீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பால் உங்களின் வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
சுய தொழிலில் மேன்மை உண்டாகும். வெளிநாட்டு வேலை உறுதியாகும். பெண்களுக்கு எதிர்பார்த்த வரன் அமைந்து திருமண காரியம் நடக்கும் கைவினைப் பெருட்கள் விற்பனை நல்ல லாபத்தைத் தரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், கருப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடு செய்து, மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியைத் தரும்.

கடகம்

தைரியமும். துணிச்சலும் கொண்டு சிறந்து விளங்கும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை கிடைப்பதுடன் தன ஸ்தானாதிபதியுடன் ஏழாமிட அதிபதி சனி ராசியை பார்ப்பதும் உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மேம்பட செய்யும். எதையும் முன்பு போல திடீர் முடிவு எடுப்பதை தவிர்த்து, யோசித்து செயல்படுவது உங்களுக்கு நல்ல பலனை பெற்று தரும். இரக்க குணம் கொண்ட உங்களின் நோக்கம் சரியாக இருந்தாலும், அதனால் நீங்கள் துன்பத்திற்கு. ஆளாகாமல் இருப்பது நன்மையை தரும் என்பதால், எதையும் பொறுமையுடன் ஆராய்ந்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி செலவுகள் வந்து பண பற்றாகுறை வரும் போது, அதனை சரியாக கணக்கிட்டு செலவு செய்வதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு அதற்கான சூழ்நிலை ஏற்படும். பொருளாதார வரவு உயரும்.

சந்திராஷ்டம நாட்கள்:
19.02.2023 ஞாயிறு இரவு 01.36 முதல் 22.02.2023 புதன் அதிகாலை 04.33 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

புனர்பூசம் 4ம் பாதம்:
கடன் தீர்க்க பாடுபட்டு உழைத்தாலும், அதனை திரும்ப பல வழிகளில் முயற்சி செய்து வராமல் தடுக்க, தரும காரியம் செய்து, வளமான வாழ்வு பெறுவீர்கள்.

பூசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
வேலையில் கவனம் செலுத்தி உங்களின் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு சுயதொழிலில் மேன்மை உண்டாகும். பணவரவு இருக்கும்.

ஆயில்யம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
ஆழ்ந்த சிந்தனையும், ஆக்கப் பூர்வமான ஆராய்ச்சியும், உங்களுக்கு வெற்றியைத் தரும். கூட்டுத் தொழிவில் சிலருக்கு பிரச்சனை வரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, ஒரேஞ்ச், மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து தீபம் ஏற்றியும், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு தீபம் ஏற்றியும் வழிபட்டு வர, சகல காரியமும் ஜெயம் உண்டாகும்.

சிம்மம்

கொள்கைப் பிடிப்பும், உறுதித் தன்மையும் கொண்ட சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதி பார்வை பெறுவதும், தொழில் ஸ்தானத்தில் யோகாதிபதி செவ்வாய் அமர்வதும் உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழில் ரீதியான சில சங்கடங்கள் வந்தாலும், குறுகிய காலத்தில் அவை மறையும். அரசியலில் இருப்பவருக்கு சில சவால்களை சந்தித்து, பதில் சொல்ல வேண்டி வரும். எதுவும் உங்களை பாதிக்குப்படி அமையாது என்றாலும், நீங்கள் எதிர்பார்த்திராத வழியில் சங்கடங்கள் வரக்கூடும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கடன் சுமைகள் நீங்கி, பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், நல்ல முடிவு எடுக்கும் உரிமையும் பெறுவீர்கள். உடல்நலனின் சற்று முன்னேற்றம் உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள்:
22.02.2023 புதன் அதிகாலை 04.34 முதல் 24.02.2023 வெள்ளி காலை 08.51 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

மகம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
எடுத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் எதையும் சிறந்த முறையில் செய்து முடிப்பீர்கள்.

பூரம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
தொழிலில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சகல யுக்திகளையும் செய்வீர்கள். முக்கிய திருப்பு முனையாக சில காரியம் அமையும்.

உத்திரம் 1ம் பாதம்:
பொது வாழ்விலும், அரசியலில் உங்களின் செல்வாக்கு உயரும். எதையும் விடாபிடியாக பிடித்த கொண்டு, செயல்பட்டு வெற்றிக் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, வெண்மை, ஒரேஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமைகளில் தெட்சணாமூர்த்தியை வழிபாடு செய்து, மூன்று நெய் தீபமேற்றி வணங்கி வர உங்களின் சகல காரியமும் தடையின்றி சிறப்பாக அமையும்.

கன்னி

ஆக்கப் பூர்வமான விடயங்களை சரியான தருணத்தில் செய்யும் கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், நான்காமிடத்தில் புதன் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதும் உங்களின் வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும். திறமையுடன் செயல்பட்டு நன்மை பெறுவீர்கள். அடுக்கடுகான விடயங்களை செயல்படுத்தி, மென்மேலும் சுறுசுறுப்புடனும் இயங்குவீர்கள். அறிவியல் சார்ந்த விடயங்களில் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு சிறந்த வளம் கிட்டும். ஆசிரியர் பணி, பத்திரிக்கை துறை, அன்பர்களுக்கு வேண்டிய ஆவணங்களும், உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். குறுகிய கால வளர்ச்சி அடைவீர்கள். துரிதமான உங்களின் செயல்களால் நீங்கள் நினைத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். பெண்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பும், வங்கி மூலம் கடன் வசதியும் கிடைக்கப் பெறுவீர்கள். மருத்துவ துறையினருக்கு வருமானம் பெருகி, வளம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
24.02.2023 வெள்ளி மாலை 08.52 முதல் 26.02.2023 ஞாயிறு மாலை 10.46 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
அரசியலிலும், உத்தியோகத்திலும் உங்களின் செல்வாக்கு உயரும். நீங்கள் ஒரு காரியத்தில் ஈடுபட்டு, அதை முடிக்காமல் வேறு வேலையை பார்க்க மாட்டீர்கள்.

ஹஸ்தம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். உங்களின் அன்றாட பணிகளை சரியாக செய்து முடிக்க வேண்டுமென்று எண்ணி செயல்படுவீர்கள்.

சித்திரை 1, 2 ஆம் பாதங்கள்:
உரிமையை நிலை நாட்ட பாடுபடவேண்டி இருக்கும். சின்ன விடயத்தைக் கூட பல முறை சென்று பார்க்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தும். கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, வடகிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளி செவ்வாய்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து தேசிகாய் தோலில் விளக்கு போட்டு (விளக்கெண்ணெய்) வழிபாடு செய்து வர உங்களின் வேண்டுதல் உடனே நிறைவேறும்.

துலாம்

எதைச் செய்தாலும் வித்தியாசமாகவே செய்யும் துலாம் ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு சனி பார்வை பெறுவதும், லாபஸ்தானத்தை ராசிநாதன் பார்ப்பதும். குரு தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பதால், உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். எதிலும் முன்கூட்டியே யோசித்து செயல்படும் உங்களின் செயல்களால், சில விடயங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அறிவியல் ஆராய்ச்சி சம்மந்தமான துறையில் சிறந்து விளங்குவீர்கள். குடும்பத்தில் சச்சரவுகள் இருந்த நிலை மாறி, மகிழ்ச்சிப் பொங்கும். எதையும் ஏமாற்றமாக பார்த்த நீங்கள், இனி காரியமாக பார்ப்பீர்கள். சட்டத்துறையிலும், கலைத்துறையிலும் கூடுதல் முன்னேற்றம் பெறுவீர்கள். ஏற்றமாக காரியங்களை செய்து மேலும் வளம் பெற்று காரியத்தில் கண்ணாக இருந்து செயல்படுவீர்கள். புத்திரர்களின் மூலம் பெருமை படும்படியான சூழ்நிலை உருவாகும். பொருளாதாரம் சிறக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:
26.02.2023 ஞாயிறு மாலை 03.20 முதல் 28.02.2023 செவ்வாய் இரவு 12.14 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

சித்திரை 3, 4 ஆம் பாதங்கள்:
சாதனை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் உங்கள் செயல்களில் இருக்கும். தொழிலில் போட்டிகளை வென்று, வளம் பெறுவீர்கள். மலை பிரதேசத்திற்கு சாகச யாத்திரை செல்வீர்கள்.

சுவாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
காலத்தை அறிந்து செயல்படுவீர்கள். வெளிநாட்டு தொழில் செய்து வருபவர்களுக்கு வேண்டிய வசதிகளைப் பெறுவீர்கள். தாய் வழியில் சுபகாரியம் நடக்கும்.

விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
முக்கிய தகவல்களால் உங்களின் பணி சிறக்கும். உன்னதமான செயல்பாடுகளால் உங்களின் செயல்களை செய்து, வருமானத்தை அதிகரித்துக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, நீலம், பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை பைரவருக்கு மிளகு திரியில் நல்லலெண்ணெய் தீபமும், வெள்ளிக்கிழமை சுப்ரமணியருக்கு நெய் தீபமிட்டு வணங்கி வர அனைத்து வித காரியமும் சிறப்பாக அமையும்.

விருச்சிகம்

திடமான நம்பிக்கையுடன் செயல்பட்டு வாழ்வை வளப்படுத்தும் விருச்சிக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், ராசிநாதனுடன் சந்திரன் பார்வை பெறுவதும் உங்களின் தேவைகளுக்கு, குறிப்பாக பணதேவைகளில் நிறைவைத் தரும். உங்களின் தொழில் ஸ்தானம் தொழிற்சங்க பணிகளில் பணியாளர்களின் குறை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு வளம் பெற உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் கூட்டுத் தொழிலில் நல்லபடி முன்னேற்றம் உண்டாகும். எதையும் கிடைக்கும் முன்பு, கிடைத்து விட்டதாக எண்ணிக்கொண்டு ஏமாற்றம் அடையும் போது வருத்தம் கொள்வீர்கள். அதை தவிர்த்து தன் சுய முயற்சியால் உங்களின் சீரான பணிகளை செய்து வருவதன் மூலம், முன்னேற்றம் அடைவீர்கள். விளையாட்டுத் துறையிலும், விவசாயத்திலும் கூடுதல் வருமானத்தை பெறுவீர்கள். பண புழக்கம் இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:
01.02.2023 புதன் மாலை 04.58 முதல் 04.02.2023 சனி அதிகாலை 04.03 மணி வரையும்.

28.02.2023 செவ்வாய் இரவு 03.03.2023 வெள்ளி பகல் 11.12 மணி வரையும்.

நட்சத்திர பலன்கள்:

விசாகம் 4ம் பாதம்:
கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உங்களின் கடமைகளை உன்னிப்பாக கவனித்து செயல்படுவீர்கள். வங்கி மூலம் கடன் வசதியை பெறுவீர்கள்.

அனுஷம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
உங்களின் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கொடுத்த வேலையை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிப்பீர்கள். எதையும் மனதைரியத்துடன் எதிர்கொள்வீர்கள்.

கேட்டை 1. 2, 3, 4 ஆம் பாதங்கள்:
உயர் கல்வி சம்மந்தமாக வெளிநாடு சென்று வர எடுக்கும் முயற்சி, வெற்றியைத் தரும். தடைபட்ட சில காரியம், உங்களின் சுயமுயற்சியால் வெற்றியை தரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
ஒரேஞ்ச், வெண்மை, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், புதன், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து விளக்கெண்ணெய் தீபமிட்டும். செவ்வாய்கிழமைகளின் சுப்ரமணியர வழிபாடு செய்து நெய் தீபம் ஏற்றி வணங்கி வர, சகல காரியமும் உங்கள் எண்ணம் போல நிறைவேறும்.

தனுசு

நேர்மையும், மன உறுதியும் கொண்டு விளங்கும் தனுசு ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன், உங்களின் மறைவு ஸ்தானங்களை பார்வை இடுவதும், தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும் உங்களின் யோகதிபதி சூரியன், தன ஸ்தானத்தில் அமர்ந்து உங்களுக்கு தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறந்த நற்பலன்களை வழங்குவார்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் தொண்டு, சிறந்த வளர்ச்சியைப் பெற்றுத் தரும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிக் கொள்ள உங்களின் முயற்சிகள் நன்மையை பெற்றுத் தரும். உறுதியான சில முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். காலத்தையும், நேரத்தையும் விணடிக்காமல் நீங்கள் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். சிறுதடைகளை எதிர்கொண்டு மீள்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சில சச்சரவுகள் முடிவுக்கு வரும். பண புழக்கம் இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:
04.02.2023 சனி அதிகாலை 04.04 முதல் 06.02.2023 திங்கள் 03.45 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:
மூலம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
காலத்தை அறிந்து செயல்படுவீர்கள். உங்களின் தொழிலில் போட்டிகள் மறைந்து, தேவையான தொழில் முன்னேற்றத்தை பெற்று பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள்.

பூராடம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
பெண்களின் சுயதொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு சொந்த வீடு கட்டும் கனவு, முயற்சியால் நலம் பெறும். கலைதுறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்:
அரசியலிலும், அரசாங்க பணியிலும் உங்களின் பணி சிறப்பாக அமையும். உங்களுக்கு என்று மதிப்பையும் மரியாதையும் அதிகரித்துக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், வெண்மை, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் மாரியம்மனுக்கு விளக்கெண்ணெய் தீபமும், சனிக்கிழமை பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும் இட்டு. வழிபட்டு வர உங்களின் அனைத்து முயற்சியும் வெற்றியை தரும்.

மகரம்

மனதில் தோன்றியதை செயலால் செய்து எதையும் வெல்லும் மகர ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன், ராசியிலும், எட்டாம் அதிபதியுடன் இணைவு பெறுவதும், யோகாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தல் அமர்வதும் உங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உரிய பாதை காட்டி வளம் பெற செய்வார்கள். குடும்ப பிரச்சினைகள் பேசி தீர்க்கும் நிலை உண்டாகும். கடந்த காலங்களில் தொழில் போட்டியும், உடல்நல குறைபாடுகளும், மன உளைச்சல் இருந்து வந்த நிலை மாறி நன்மைகள் உண்டாகும். புனித யாத்திரை சென்று வருவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். உறுதியான முடிவுகளை எடுத்து ,காரியத்தில் வெற்றி காண்பீர்கள். அரசியலில் உங்களுக்கு புதிய பதவியும், பொறுப்புகளும் உண்டாகும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணம் மிகவும் சிறப்பாக நடக்கும். பொருளாதாரத்தில் வளம் உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள்:
06.02.2023 திங்கள் மாலை 03.47 முதல் 08.02.2023 புதன் இரவு 02.23 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
அரசியலில் உங்களின் பிரவேசம் நன்றாக இருக்கும். அரசு அதிகாரிகளின் மூலம் சில காரியம் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொருளாதாம் சிறக்கும்.

திருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
தடைப்பட்ட காரியங்கள் சிறப்பாக அமையும். திட்டமிட்ட சில காரியம் தாமதமானாலும், உங்களுக்கு சாதகமாக அமையும். தொழிலில் முன்னேற்றம் காணுவீர்கள்.

அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்:
காலத்தை வீண் செய்யாமல் உங்களின் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொது நலத்தில் மிகவும் அக்கறை எடுத்து செயல்பட்டு நன்மையை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், வெண்மை, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும் செவ்வாய் கிழமை முருகனுக்கு விளக்கெண்ணெய் தீபமும் ஏற்று வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் கைகூடும்.

கும்பம்

தன் கொள்கையில் உறுதியாக கடைசி வரை நிலைக்கும் கும்ப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குரு அமர்ந்து மறைவுஸ்தானங்களையும் தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பதும் உங்களின் தொழிலில் சில சங்கடம் இருந்தாலும். ஏதாவது வழியில் சரி செய்து கொள்வீர்கள். உரிமையை நிலை நாட்ட சில போராட்டங்கள் செய்து வளம் பெறுவீர்கள். மிகைபடுத்தப்பட்ட எந்த விடயத்தையாளும் போது சற்று கவனமாக செயல்படுவீர்கள். அரசியலிலும் உத்தியோகத்திலும் உங்களின் போக்கு நல்ல முன்னேற்றம் தரும். விளையாட்டு துறையில் நல்ல மேன்மையை பெறுவீர்கள். பெண்களுக்கு தேவைகளில் நிறைவேறும் திருமண காரியம் கைகூடும். கலைத்துறையினருக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து தருவதும். அதனை சிறப்பாக அமைப்பதிலும் திறமையுடன் செயல்பட்டு நற்பலன்களை பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
08.02.2023 புதன் 02.24 முதல் 11.02.2023 சனி காலை 10.46 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள்:
சரியான நேரத்தில் உங்களுக்கு வரவேண்டிய பாக்கி வசுலாகும். சிலர் நீண்ட நாட்கள் கடனை தீர்த்து விடுவீர்கள். தொழில் சற்று முன்னேற்றம் தரும்.

சதயம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
கலைத்துறையினருக்கு வெளியூர்களின் சென்று நிகழ்ச்சிகளை செய்து பயன்பெறுவீர்கள். பெண்களுக்கு வெளிநாடு வேலை தொழில் வாய்ப்புகள் அமையும்.

பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்கள்:
சில விடயங்களில் பெரும் முயற்சிகளை எடுத்து. எதையும் செய்ய வேண்டி இருக்கும். மலை போல இருந்த காரியம் பணி போல விரைந்து முடியும். முயற்சி வெற்றியை பெற்று தரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, திங்கள், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும் 9 மிளகு திரியில் ஏற்றி வேண்டிக் கொள்ள தடைபட்ட காரியம் கைகூடும். விரைவில் நல்ல காரியம் நடக்கும்.

மீனம்

விவேகத்துடன் எதையும் செய்து வெற்றி காணும் மீன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு ராசியிலும் ஆறாம் அதிபதி சூரியன் லாபஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் நாற்பட்ட கடன் தீர வாய்ப்புகள் அமையும். வங்கி மூலம் கடன் எதிர்பார்த்திருந்த காரியம் நடந்த வழி கிடைக்கும். புது வளமான வாழ்வு கிடைக்க சிலருக்கு திருமண காரியம் நிறைவேறும். கூட்டு தொழில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உங்களின் நண்பர்களே உங்களுக்கு எதிர்பார்த்த பிடி நடக்காமல் மாறுபட்டு இருப்பது மனத்தில் குறைபாடு தெரியும். அறிவியல் ஆராய்ச்சியிலும் ஆன்மீக தொண்டுகளில் உங்களின ஆர்வம் நல்ல முன்னேற்றம் தரும். கலைத்துறையினருக்கு அடிக்கடி நிகழ்ச்சிகள் கிடைக்க பெற்று வளம் பெறுவீர்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வெளிநாடு அடிக்கடி சென்று வருவீர்கள். வெளிநாட்டு தொழில் சிறப்பாக இருக்கும். முக்கிய பிரமுகர் சந்திப்பு ஆறுதலைத் தரும்.

சந்திராஷ்டம நாட்கள்:
11.02.2023 சனி காலை 10.47 முதல் 13.02.2023 திங்கள் மாலை 04.42 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

பூரட்டாதி 4ம் பாதம்:
பிறரிடம் ஏமாற வேண்டி வரும் என்பதால் யாரிடமும் கவனமுடன் இருப்பது நல்லது. உங்களின் தொழில் சார்ந்த வெளியூர் பயணம் நன்மையை தரும்.

உத்திரட்டாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். உங்களை நம்பியவர்களுக்கு முடிந்த உதவியை செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த அளவு அமையவில்லை என்றாலும் நன்மையே கிட்டும்.

ரேவதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
மன ரீதியான சில பிரச்சனைகள் வந்து மறையும். நிலையான தொழில் செய்வதில் சில சிரமம் உண்டாகும். பணப்பிரச்சனைகளை எளிதில் சமாளித்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், சிவப்பு, நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர உங்களின் சகல வித தோசமும் மறைந்து நன்மை உண்டாகும்.

கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
தொடர்புகளுக்கு - 0091-9789341554

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்