ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தகவல்

Published By: Rajeeban

31 Jan, 2023 | 04:54 PM
image

ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரக ஒத்துழைப்புக் கூட்டத்தில் அவர் இவ்வாறாக அறிவித்தார்.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜெகன் மோகன் ரெட்டி “எங்கள் தலைநகரான விசாகப்பட்டினத்திற்கு உங்களை நான் அன்புடன் வரவேற்கிறேன். ஆந்திராவில் தொழில் தொடங்குவது எவ்வளவு எளிமையானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நானும் வைசாக் நகருக்கு குடியேறுகிறேன்" என்று கூறினார்.

ஏற்கெனவே ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தை தலைநகராக்குவது பற்றி கூறியிருந்தார். மாநிலத் தலைமையகமாக விசாகப்பட்டினம் செயல்படும். அது ஆளுநரின் தலமாகவும் இருக்கும். ஆனால், சட்டப்பேரவை அமராவதியிலிருந்து இயங்கும். உயர் நீதிமன்றம் கர்னூலுக்கு மாற்றப்படும் என்று கூறியிருந்தார்.

1956-ல் ஆந்திரா மெட்ராஸில் இருந்து பிரிக்கப்பட்டபோது கர்னூல்தான் அதன் தலைநகராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விசாகப்பட்டினத்தை ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக அவர் இன்று (ஜன.31) அறிவித்திருக்கிறார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இன்னமும் உயிருடன் இருக்கின்றேன் -...

2023-04-01 14:34:48
news-image

நீதிமன்றத்தில் டிரம்பிற்கு கைவிலங்கிடமாட்டார்கள் - அதிகாரி...

2023-04-01 12:34:03
news-image

இத்தாலியில் ChatGPTக்கு தடை

2023-04-01 14:41:47
news-image

நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ;...

2023-03-31 17:11:38
news-image

டிரம்பை கைதுசெய்வார்களா? கைவிலங்கிடுவார்களா- சிறையில் அடைப்பார்களா?

2023-03-31 15:26:36
news-image

உருகி வரும் இமயமலை; மத்திய அரசு...

2023-03-31 14:47:53
news-image

சிட்னி பாலத்தின் மீது பாதுகாப்பற்ற விதத்தில்...

2023-03-31 13:30:36
news-image

ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜராகுவார் என...

2023-03-31 13:10:19
news-image

ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி சொத்தில்...

2023-03-31 11:20:21
news-image

பிலிப்பைன்ஸில் கப்பல் தீப்பற்றியதால் 31 பேர்...

2023-03-31 10:15:27
news-image

இந்தூர் ஆலய படிக்கட்டு கிணறு இடிந்ததால்...

2023-03-31 09:32:10
news-image

ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் நீதிபதிகள் உத்தியோகபூர்வமாக...

2023-03-31 09:19:48