(என்.வீ.ஏ.)
பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தலைமைப் பயிற்றுநர் பதவியை சந்திக்க ஹத்துருசிங்க மீண்டும் ஏற்கவுள்ளார்.
இதனை முன்னிட்டு நியூ சவுத் வேல்ஸ் அணியின் உதவிப் பயிற்றுநர் பதவியில் இருந்து ஹத்துருசிங்க விலகிக்கொண்டுள்ளார்.
பங்களாதேஷின் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அணி பயிற்றுநராக ஸ்ரீராம் தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் பதவியை ஹத்துருசிங்க மீண்டும் ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளபோதிலும் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும் தமது அணியில் வகித்துவந்த உதவி பயிற்றுநர் பதவியிலிருந்து ஹத்துருசிங்க விலகிவிட்டதை நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்தது.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஹத்துருசிங்க ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்தே அவர் பயிற்றுநர் பதியை ஏற்கவுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் ஊகங்கள் வெளியிடப்படுகின்றன.
தற்போதைய பயிற்றுநர் ரசல் டொமிங்கோவுக்குப் பதிலாக புதிய பயிற்றுநர் பெப்ரவரி 18ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடையில் நியமிக்கப்படுவார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்தார்.
புதிய பயிற்றுநரின் பெயர் குறிப்பிடப்படாத போதிலும் ஹத்துருசிங்க மீளழைக்கப்படுவார் என அறியக் கிடைப்பதாக 'க்ரிக்இன்போ' செய்தி வெளியிட்டுள்ளது.
'புதிய பயிற்றுநர் வருவார். அவர் ஹத்துருவா அல்லது வேறு யாருமா என்பது எனக்கு தெரியவில்லை. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதுபற்றி அறிவிக்கவில்லை. ஆனால், அடுத்த பயிற்றுநரை எல்லோரும் பார்ப்பார்கள்.
இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு (மார்ச் 11) முன்னர் புதிய பயிற்றுநர் பதவி ஏற்றிருப்பார்| என நஸ்முல் ஹசன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM