காண்டாமிருகங்களை வேட்டையாடுவது இரண்டுமடங்காக அதிகரித்துள்ளது என நமீபியா தெரிவித்துள்ளது.
நமீபியாவில் அருகிவரும் காண்டாமிருகங்கள் கடந்த வருடம் மிகப்பெருமளவில் வேட்டையாடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அதிகாரிகள் 2021 ம் ஆண்டை விட இது இரண்டு மடங்கு அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர்.
நமீபியாவின் மிகப்பெரிய தேசிய பூங்காவான எட்டோசாவிலேயே அதிகளவு காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளன.
சீனா மற்றும் வியட்நாமில் காண்டாமிருக கொம்பிற்கான தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து நமீபியாவில் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுவது கடந்த சில வருடங்களில் பல மடங்காக அதிகரித்துள்ளது.
எட்டோசாவில் கடந்த வருடம் வேட்டைக்காரர்கள் 61 கறுப்பு காண்டாமிருகங்களையும் 26 வெள்ளை காண்டாமிருகங்களையும் கொன்றுள்ளனர்.
எங்களின் மிகவும் பிரபலமான பூங்காவே காண்டாமிருக வேட்டைக்கான மையமாக மாறியுள்ளமை குறித்து கவலையடைகின்றோம் என நமீபிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்ற கும்பல்கள் காண்டாமிருகங்களை கண்டுபிடித்து மயக்கமடையச்செய்வதற்கான நவீனவழிமுறைகளை பயன்படுத்துகின்றன பின்னர் இவர்கள் அவற்றின் கொம்புகளை வெட்டி எடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM