ஜோதிகா நடிக்கும் பொலிவுட் திரைப்படம் 'ஸ்ரீ'

Published By: Ponmalar

31 Jan, 2023 | 04:22 PM
image

திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் நட்சத்திர நடிகைகளின் முன்னணியில் இருக்கும் நடிகை ஜோதிகா நடிப்பில் தயாராகும் 'ஸ்ரீ' எனும் இந்தி திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பொலிவுட் இயக்குநர் துஷார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய ஹிந்தி திரைப்படம் 'ஸ்ரீ'. இதில் பொலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் கதையின் நாயகனாக நடிக்கிறார். நடிகை ஜோதிகா கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தொழிலதிபர் ஸ்ரீகாந்த் கொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை பிரபல பொலிவுட் தயாரிப்பாளர் நிதி பார்மர் ஹீராநந்தினி தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்து நடிகை ஜோதிகா, தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருப்பதாகவும், படக்குழுவினருடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம் என்றும் பிரத்யேக புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இந்த திரைப்படத்தின் புதிய தகவலை பகிர்ந்திருக்கிறார்.

'உடன்பிறப்பே' படத்திற்குப் பிறகு நடிகை ஜோதிகா, மலையாள சுப்பர் ஸ்டாரான மம்முட்டியுடன் இணைந்து 'காத்தாள்' என திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது 'ஸ்ரீ 'எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தமிழில் நடிப்பதை தவிர்த்து மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடிப்பதன் மூலம் தொடர்ந்து திரையுலகில் கலை சேவை செய்து வரும் ஜோதிகாவை திரையுலகினரும், அவரது ரசிகர்களும் பாராட்டுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right