தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்களிடத்தில் நன்கு அறிமுகமான நட்சத்திர நடிகரான நானி நடிப்பில் தயாராகி இருக்கும் 'தசரா' திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, நடிகர்கள் தனுஷ், துல்கர் சல்மான், ஷாஹித் கபூர் ஆகியோர் இணைந்து தங்களது இணைய பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.
தெலுங்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தசரா'. இந்தத் திரைப்படத்தில் 'நேச்சுரல் ஸ்டார்' நடிகர் நானி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் சமுத்திரக்கனி, ஷைன் டாம் சாக்கோ, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஆந்திராவில் உள்ள நிலக்கரி சுரங்க தொழிலாளர்களின் வாழ்வியலையும், சுரங்க தொழிலின் யதார்த்த நிலையையும் மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் நடிகர் நானியின் தோற்றம், சிகை அலங்காரம், பேச்சு, பாவனை, உடல் மொழி இவை அனைத்தும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 30 ஆம் திகதியன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM