வரி விவகாரம் - ஜனாதிபதியை சந்திப்பதற்கு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் முயற்சி

Published By: Rajeeban

31 Jan, 2023 | 03:33 PM
image

சமீபத்தைய வரி அதிகரிப்புகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வாய்ப்பளி;க்கவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

தற்போதைய வரிமுறையை நீக்கிவிட்டு நியாயமான முறையொன்றை நடைமுறைப்படுத்தவேண்டும் என ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒருவாரகாலத்திற்குள் நியாயமான பதில் கிடைக்காவிட்டால் போராட்டங்களை அதிகரிக்க எண்ணியுள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களிற்கு பெரும் அசௌகரியத்தை  ஏற்படுத்தியுள்ள சில தரப்பினரின் நன்மைக்காக  புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என  அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதி தலையிட்டு நியாயமான வரிகளை அறிவிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37