நடிகர் சிம்ஹா நடிக்கும் 'வசந்த முல்லை' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

Published By: Ponmalar

31 Jan, 2023 | 03:27 PM
image

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி இருக்கும் 'வசந்த முல்லை' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'செய் செய்..' எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் அனிமேஷனுடன் கூடிய லிரிக்கல் வீடியோவும் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'வசந்த முல்லை'. இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மிரா பர்தேசி நடித்திருக்கிறார். கோபி அமர்நாத் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் ஜோனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ரஜினி தல்லூரி மற்றும் ரேஷ்மி சிம்ஹா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பெப்ரவரி பத்தாம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ' செய் செய்..' மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை தமிழில் றாப் பாடகரான அறிவு எழுதி, பாடியிருக்கிறார். இந்தப் பாடல் றாப் இசை வடிவத்தில் இருப்பதால், இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

நடிகர் சிம்ஹா தயாரித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றியை பொருத்துதான் நடிகர் சிம்ஹாவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right