திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சட்டபூர்வ அனுமதி - சீன மாகாணம் அறிவிப்பு

Published By: Rajeeban

31 Jan, 2023 | 03:02 PM
image

திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சீனாவின் மாகாணமொன்று சட்டபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.

திருமணமாகாதவர்கள் குடும்பவாழ்வில் ஈடுபடுவதற்கும் திருமணமாணவர்களிற்கான சலுகைகளை அனுபவிப்பதற்கும் சீனாவின் வடமேற்கு சிச்சுவான் மாகாணம் அனுமதியளிக்க உள்ளது.

சிச்சுவான் மாகாணத்தின் சுகாதார அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்தே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் திருமணமான பெண்கள் மாத்திரமே குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் திருமண மற்றும் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதை குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும்  திருமணமாகதவர்களுக்கு சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

 பெப்15 ம் திகதி முதல் ,வாரிசு குறித்து விருப்பமுடைய திருமணமாணவர்கள் மற்றும் தனிநபர்கள் சீனாவின் சனத்தொகை அதிகமாக காணப்படும் ஐந்தாவது மாநிலத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

எத்தனை பிள்ளைகளை வேண்டுமென்றாலும் அவர்கள் பதிவு செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்டகால மற்றும் சீரான மக்கள் தொகையை ஊக்குவித்தல் என்ற அடிப்படையிலேயே அதிகாரிகள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.

இதுவரையில் இரண்டுகளை பெற்றுக்கொள்ள விரும்பும் திருமணமான தம்பதியினர் மாத்திரம் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

சீனாவின் சனத்தொகை கடந்த ஆறுதசாப்த காலத்தில் முதல் தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10