ஆராய்ச்சி சேவைகளுக்காக சிட்னி பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் - அரசாங்கம் தீர்மானம்

Published By: Digital Desk 5

31 Jan, 2023 | 06:38 PM
image

(எம்.மனோசித்ரா)

தொழிநுட்பவியல் கல்லூரி மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஆராய்ச்சி சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவின் வொசிங்டன் நகரில் அமைந்துள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகமும் இணைந்து, பெனின் குடியரசு, பிலிப்பைன், டன்சானியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் ஒத்துழைப்படன் நிலைபெறுதகு வகையான போசாக்கு மிக்க உணவு முறைகளுக்காக பழவகைகள் மற்றும் மரக்கறிகளின் பயன்பாடுகள் தொடர்பான ஆராய்ச்சியை நடாத்துவதற்காக சர்வதேச விவசாய ஆராய்ச்சி நிலைய அமைப்புடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தொடர்பாக சமகால நிலைமைகள் தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட ஆராய்ச்சி சேவைகள் சிலவற்றை நடாத்துவதற்காக சிட்னி பல்கலைக்கழகத்தால் தொழிநுட்பவியல் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக 11 250 அவுஸ்திரேலிய டொலர் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக தொழிநுட்பவியல் கல்லூரி மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உப ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23
news-image

மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற...

2023-03-23 13:32:04
news-image

அம்பாறையில் புடவைக்கடையில் தீ விபத்து

2023-03-23 11:47:29
news-image

வாய்மூல விடைக்கான கேள்விகளை காணி வழக்கு...

2023-03-23 12:23:34
news-image

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்குமாறு...

2023-03-23 11:33:42
news-image

மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தப்பட்ட புரு மூனா!  

2023-03-23 11:28:34