கொழும்பு கிளப்பின் புதிய தலைவராக முதல் பெண் நியமனம்

Published By: Digital Desk 5

31 Jan, 2023 | 03:05 PM
image

கொழும்பு கிளப் 150 வருடங்களிற்கு முன்னர் இலங்கையில் வசித்த பிரிட்டிஸ் ஸ்கொட்லாந்து நபர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கும் ஓய்வெடுப்பதற்கும்  பிரிட்டனை சேர்ந்தவர்கள் கொழும்பு கிளப்பை ஆரம்பித்திருந்தனர்.

சுமார் 125 வருடங்களாக அது ஆண்களிற்கான ஒரு கிளப் ஆக மாத்திரம் காணப்பட்டது. பெண்கள் உறுப்பினர்களாக வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

1995 முதல் பெண் உறுப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டது அதன் பின்னர் தொடர்ந்தும் பெண்களிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இறுதியாக இடம்பெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு இடம்பெற்றது கொழும்பு கிளப்பின் தலைமை பதவிக்கு பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார்.

பெண் ஒருவரின் பெயரை  தலைமை பதவிக்கு முன்மொழிந்த முன்னாள் தலைவர் குமார் ஜெயசூரிய கழகம் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தவுள்ளது என குறிப்பிட்டார்.

எங்களின் 150 கால வரலாற்றில் 125 வருடங்களாக பெண்களிற்கு உறுப்புரிமை வழங்கப்படவில்லை,இந்த அநீதி 1995 இல் சரி செய்யப்பட்டது இதன் பின்னர் நாங்கள் பாலின நடுநிலைமை என்ற பாதையில் உறுதியாக பயணித்துள்ளோம்.

25 வருடங்களில் அந்த முயற்சியின் உச்சத்தை தொட்டுள்ளோம்,முதல் தடவையாக பெண் ஒருவரை தெரிவு செய்துள்ளோம்.

கொழும்பு கிளப்பின் தலைமை பதவிக்கு அனுசியா குமாரசுவாமியின் பெயரை முன்மொழியும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் தொடர்புபட்டிருப்பதை பெருமைக்குரிய ஒரு விடயமாக கருதுகின்றேன் அவரை கழகத்தின் பொதுக்குழு ஏகமனதாக நியமித்துள்ளது.

அனுஷ்யா 2006 ஆம் ஆண்டு முதல் குழுவில்  கமிட்டியில் பணியாற்றியுள்ளார் மற்றும் கடந்த ஆறு ஆண்டுகளாக முறையே கெளரவப் பொருளாளர் கெளரவச் செயலாளர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை வகித்துள்ளார். கொழும்பு கிளப்பின் அதிர்ஷ்டம் மிகவும் பாதுகாப்பான கரங்களில் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.

அனுஷ்யா குமாரசுவாமி இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினராகவும் ஐக்கிய இராச்சியத்தின் முகாமைத்துவக் கணக்காளர் பட்டய நிறுவனத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

அவர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் குழு நிதிப் பணிப்பாளராக இருந்துள்ளார். அந்த நேரத்தில் இலங்கையில் புளூ சிப் நிறுவனமொன்றின் சபைக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி.

அதன் பிறகு அவர் நிதி அமைச்சகத்தில் ஆலோசகராக சேர்ந்தார் முதன்மையாக நிதிக் கொள்கையில் குறுகிய காலத்திற்கு அவர் பொது பயன்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் பொது நிறுவன சீர்திருத்த ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

அவர் தற்போது பிரிண்ட்கேர் பிஎல்சி வாரியத்தில் ஒரு சுயாதீன நிர்வாகமற்ற இயக்குநராக பணியாற்றுகிறார்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்  மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஆகியவற்றில் பணியாற்றிய அவர் தற்போது சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை மற்றும் பெண்கள் மற்றும் ஊடகக் குழுவின் வாரியங்களில் உள்ளார்.

பதவியை ஏற்றுக்கொண்ட குமாரசுவாமி 'பெண்கள் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டிய உலகில்இ கொழும்பு கிளப் முற்போக்கானது அது ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் பாராட்டப்பட வேண்டும் பாராட்டப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் எனக்காக உங்கள் நம்பிக்கைக்கு நன்றி என்றார்.

கிளப்பின் வளாகம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் அவர் தனது உடனடி முன்னோடிகளான நைஜல் ஆஸ்டின் மற்றும் குமார் ஜெயசூரிய ஆகியோரால் அமைக்கப்பட்ட உயர் தரத்தை பராமரிக்க விரும்புகிறார். பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் அவர் விரும்புவார் அவர்கள் இன்னும் கிளப்பை முக்கியமாக ஆண்களுக்கான நிறுவனமாக கருதுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'சூர்யா'வுக்கான வர்த்தக நாமத் தூதுவராக இலங்கை...

2023-03-23 15:05:01
news-image

கடல் சுத்திகரிப்புத் திட்டத்தினூடாக தூய்மையான இலங்கையை...

2023-03-23 10:52:04
news-image

மக்கள் வங்கிக்கு சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள்...

2023-03-20 16:26:13
news-image

Daraz Express இனூடாக பெண் ஓட்டுநர்களின்...

2023-03-18 16:53:49
news-image

தனது நிலையான பயணத்தை தொடரும் அமானா...

2023-03-17 11:16:17
news-image

யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் வகையில்...

2023-03-15 17:19:59
news-image

மக்கள் வங்கியின் வனிதா வாசனா மூலமாக...

2023-03-07 11:16:52
news-image

கல்வி அமைச்சு மற்றும் Microsoft இணைந்து...

2023-03-07 11:46:52
news-image

வளர்ந்துவரும் இளம்தொழில் வல்லுநர்கள் நவீன மற்றும்...

2023-03-07 11:47:17
news-image

2022 ஆண்டிற்கான சிறந்த பெறுபேறுகளை பான்...

2023-02-28 11:36:32
news-image

சன்குயிக் ரெடி டு டிறிங்க் தொழிற்சாலையினை...

2023-02-27 14:34:37
news-image

"தைரியமான விளம்பர பிரசாரத்தின் மூலம் மாதவிடாய்...

2023-02-27 11:28:32