ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக நீட்டிப்பு

Published By: Digital Desk 5

31 Jan, 2023 | 03:26 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கையின் முன்னாள் ‍தேசிய சம்பியனான ஹிமாஷ ஹேஷானுக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டு கால போட்டித் தடை 6 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கு இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையம் ( Sri lanka Anti Drugs Agent - SLADA -'ஸ்லாடா') நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம்  திகதியன்று ஹிமாஷ ஹேஷானின் சிறுநீர் மாதிரியை பெற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பாவிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, ' ஸ்லாடா' அவருக்கு தற்காலிக போட்டித் தடை விதித்தது. அதன் பின்னர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த 'ஸ்லாடா', அவர் குற்றவாளி எனக்கூறி அவருக்கு 4 ஆண்டு கால போட்டித் தடையை கடந்த 2022 ஜூன் மாதம் விதித்தது. இக்காலப்பகுதியானது, 2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 வரையாகும்.  

இந்நி‍லையில், தடையை எதிர்த்து ஸ்லாடாவின் மேன்முறையீட்டு சபையில் தடையை எதிர்த்து ஹிமாஷ ஹேஷான் மேன்முறையீடு செய்திருந்தார். இந்த மேன்முறையீட்டு விசாரணையின் தீர்ப்பை ஸ்லாடா கடந்த 24 ஆம் திகதியன்று வெளியிட்டிருந்தது.  இதன்படி, ஹிமாஷ  ஹேஷானுக்கு  2027 ஒக்டோபர் 25 ஆம் திகதி வரையான 6 ஆண்டு காலத்திற்கு போட்டித் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

6 ஆண்டு கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ள ஹிமாஷ ஹேஷான், இக்காலப்பகுதியில் எந்தவொரு போட்டிகள் மற்றும் பயிற்சிகளிலும்  ஈடுபட முடியாது என  'ஸ்லாடா'வின் அறிவிப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41