தேர்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கவில்லை - பந்துல

Published By: Digital Desk 5

31 Jan, 2023 | 02:12 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எந்த வகையிலும் மத்திய அரசின் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தப் போவதில்லை. அவ்வாறிருக்கையில் தேர்தலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த சந்தர்ப்பத்திலும் ஆலோசனை வழங்கியிருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (31) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் , ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு ஆலோசனை வழங்கவில்லை. அதற்கான சாட்சிகள் இருந்தால் ஆதரத்துடன் நிரூபிக்க முடியும்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது கட்சிக்கும் , அரசாங்கத்திலுள்ள ஏனைய தரப்பினருக்கும் தேர்தலுக்கு தயாராகுமாறே ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றார். அதற்கமைய நாம் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கின்றோம். வேட்பாளர்களை தெளிவூட்டுவதற்கான செயற்திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

இந்த தேர்தல் எந்தவகையிலும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புபடவில்லை. எனவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நியமனங்களை வழங்கல் அல்லது நீக்குதல் தொடர்பான தேர்தலாக அமையப் போவதுமில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35