அபுதாபி - மும்பை விமானத்தில் ஊழியரை தாக்கி, அரை நிர்வாணமாக நடந்த பெண் கைது

Published By: Sethu

31 Jan, 2023 | 01:06 PM
image

பறந்துகொண்டிருந்த விமானத்தில், விமான ஊழியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் பெண்ணொருவரை இந்திய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

அபுதாபியிலிருந்து மும்பை நோக்கி பறந்துகொண்டிருந்த, விஸ்தாரா எயார்லைன்ஸின் விமானத்தில் மேற்படி தாக்குல் சம்பவம் இடம்பெற்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

45 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சாதாரண வகுப்பு ஆசனத்துக்கான டிக்கெட் பெற்றிருந்த இப்பெண், வர்த்தக வகுப்பு ஆசனமொன்றில் அமர வேண்டுமென வலியுறுத்தினார். அவரை விமான ஊழியர்கள் தடுத்தபோது, ஊழியர் ஒருவரை  அப்பெண் தாக்கியதுடன், மற்றொருவரின் மீது எச்சில் துப்பினார் எனவும் அரைநிர்வாணமாக விமானத்துக்குள் நடந்து திரிந்தார் எனவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அப்பெண்ணுக்கு தலைமை விமானியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பின்னர் அவரை கட்டுப்படுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான ஊழியர்களின் முறைப்பாட்டையடுத்து, மும்பை பொலிஸாரால் அப்பெண் கைது செய்யப்பட்டார்.

மும்பை நீதிமன்றமொன்றில் ஆஜர்செய்யப்பட்ட அப்பெண், பிணையில் செல்ல அனுதிக்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக மீனவர்கள் கைது: இந்திய வெளியுறவு...

2024-06-24 14:49:50
news-image

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு...

2024-06-24 14:40:26
news-image

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் மோடி அரசியல்...

2024-06-24 12:11:23
news-image

அடுத்தது லெபனான் யுத்தமா? ஹெஸ்புல்லா அமைப்பை...

2024-06-24 10:58:40
news-image

டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ தேவாலயங்கள்யூதவழிபாட்டு தலங்கள்...

2024-06-24 06:41:54
news-image

அடிலெய்டில் வணிக வளாகத்தில் பதற்றம் -...

2024-06-23 13:14:36
news-image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்; சென்னையில் பதுங்கி இருந்த...

2024-06-23 12:33:26
news-image

தாய்வானின் சுதந்திரத்துக்காக முயற்சி செய்பவர்களுக்கு மரண...

2024-06-23 12:03:55
news-image

காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டிப்போட்டு...

2024-06-23 10:11:14
news-image

முதல் தாக்குதல் காரணமாக அச்சமடைந்து கதறியவர்களை...

2024-06-22 12:08:53
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 3...

2024-06-22 10:40:26
news-image

கடும் வெப்பத்தால் 4 பால்கன் நாடுகளில்...

2024-06-22 10:55:22