அவுஸ்திரேலியாவில் குடும்பவன்முறைகளில் ஈடுபடுபவர்களை இலக்குவைத்து விசேட நடவடிக்கை -650 பேர் கைது

Published By: Rajeeban

31 Jan, 2023 | 12:28 PM
image

அவுஸ்திரேலியாவில் குடும்பவன்முறைகளில் ஈடுபடுபவர்களை இலக்குவைத்து நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில் 650 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் நியுசவுத்வேல்சில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது - இதில் கைதுசெய்யப்பட்டவர்களிற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சட்டவிரோத ஆயுதங்கள் போதைப்பொருட்கள் போன்றவற்றையும் காவல்துறையினர்கைப்பற்றியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் குடும்ப வன்முறை மிக அதிகமாக காணப்படுகின்றது இந்த குற்றம் தொடர்பிலான நடவடிக்கைகளில் காவல்துறையினர் அதிகளவு நேரத்தை செலவிடுகின்றனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற ஒப்பரேசன் அமரொக் நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட 648 பேரில் 164 பேர் மாநிலத்தில் மிக மோசமான குடும்ப வன்முறைகளில்  ஈடுபட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கரிசனை கொண்டிருந்தோம்,இதன் காரணமாக இவர்களை இலக்குவைத்தோம் என நியுசவுத்வேல்ஸ் காவல்துறை ஆணையாளர் கரென் வெப் தெரிவித்துள்ளார்.

சிலரை கண்டுபிடிப்பது கடினமாகஇருந்தது அவர்கள் காவல்துறையினரிடம் பிடிபடுவதை தவிர்த்து வந்தனர் இதன் காரணமாகவே நாங்கள் பாரிய நடவடிக்கையில் ஈடுபடவேண்டிய நிலையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 22 வயது நபரும் காணப்படுகின்றார் அவர் தனது நண்பியை வாக்குவாதம் ஒன்றின் போது மோசமாக மூச்சுதிணறச்செய்திருந்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இன்னமும் உயிருடன் இருக்கின்றேன் -...

2023-04-01 14:34:48
news-image

நீதிமன்றத்தில் டிரம்பிற்கு கைவிலங்கிடமாட்டார்கள் - அதிகாரி...

2023-04-01 12:34:03
news-image

இத்தாலியில் ChatGPTக்கு தடை

2023-04-01 14:41:47
news-image

நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ;...

2023-03-31 17:11:38
news-image

டிரம்பை கைதுசெய்வார்களா? கைவிலங்கிடுவார்களா- சிறையில் அடைப்பார்களா?

2023-03-31 15:26:36
news-image

உருகி வரும் இமயமலை; மத்திய அரசு...

2023-03-31 14:47:53
news-image

சிட்னி பாலத்தின் மீது பாதுகாப்பற்ற விதத்தில்...

2023-03-31 13:30:36
news-image

ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜராகுவார் என...

2023-03-31 13:10:19
news-image

ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி சொத்தில்...

2023-03-31 11:20:21
news-image

பிலிப்பைன்ஸில் கப்பல் தீப்பற்றியதால் 31 பேர்...

2023-03-31 10:15:27
news-image

இந்தூர் ஆலய படிக்கட்டு கிணறு இடிந்ததால்...

2023-03-31 09:32:10
news-image

ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் நீதிபதிகள் உத்தியோகபூர்வமாக...

2023-03-31 09:19:48