பொருளாதார நெருக்கடி நீடிக்கின்ற போதிலும் ஜனாதிபதி பிரதமர் அலுவலகங்களிற்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு

Published By: Rajeeban

31 Jan, 2023 | 11:39 AM
image

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடிக்கின்ற போதிலும் திறைசேரி ஜனாதிபதி பிரதமர் அலுவலகங்களிற்கும் அமைச்சுகளிற்கும் பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது..

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கை இன்னமும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சிக்குண்டுள்ளது - சில மாதங்களிற்கு முன்னரே தனது வரலாற்றில் முதல் தடவையாக வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது- தனது கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

 அதிகரிக்கும் வரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாழ்க்கை தரத்தில்  விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ள அதிகரித்த வாழ்க்கை செலவீனம் போன்றவை காணப்படுகின்றன.

சமீபத்தில் அதிகரிக்கப்பட்ட வரிகள் திறைசேரிக்கு சிறிய நிம்மதியை கொடுத்துள்ளன.

எனினும் ஜனாதிபதி பிரதமர் அலுவலகங்களிற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி பல  பில்லியன்களாக காணப்படுகின்றது இவற்றில் குறைப்புகள் இடம்பெறவில்லை.

திறைசேரி வெளியிட்டுள்ள புள்ளவிபரங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது ஜனாதிபதி பிரதமர் அலுவலகங்களிற்கும் அமைச்சுகளிற்கும் 2023 இல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 2022 இல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை போன்றே காணப்படுகின்றது - அதே அளவிலானதாக காணப்படுகின்றது.

இதன் காரணமாக பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் ஏன் பாரிய  குறைப்புகள் இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனாதிபதிக்கு 3.88 பில்லியன்  ஒதுக்கப்பட்டுள்ளது - 2022 இல் இந்த ஒதுக்கீடு 3.04 பில்லியனாக காணப்பட்டது.

ஜனாதிபதிக்கு விசேட கொடுப்பனவுகளிற்காக 70 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது கடந்த வருடம் இதே தொகை ஒதுக்கப்பட்டது.

2023 இல் ஜனாதிபதியின் உள்நாட்டு வெளிநாட்டு பயணங்களிற்காக 86 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, 2022 இல் இந்த தொகை 26 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00
news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25
news-image

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

2025-02-18 15:05:00
news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

பாகிஸ்தானில் பயிற்சியை முடித்துக்கொண்டு இலங்கையை வந்தடைந்தது...

2025-02-18 15:31:41
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை...

2025-02-18 13:06:16
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா...

2025-02-18 13:06:56
news-image

ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக திகழ்ந்தவர் சீதா...

2025-02-18 14:42:33
news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54
news-image

வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள்,...

2025-02-18 12:35:39