ஊடகவியலாளர்களுக்கான விழிப்பூட்டும் கலந்துரையாடல்

Published By: Ponmalar

31 Jan, 2023 | 12:30 PM
image

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான சமாதானம், நல்லிணக்கம் தொடர்பான விழிப்பூட்டும் கலந்துரையாடல் நிகழ்வு கல்முனையில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான சமாதானம், நல்லிணக்கம் தொடர்பான விழிப்பூட்டும் கலந்துரையாடல் நிகழ்வு சமாதானமும், சமூகப்பணியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனை எஸ்.எல்.ஆர் தனியார் விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29)காலை முதல் மாலை வரையும் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் நிகழ்வில்  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை மற்றும் ஊடகத்துறைக்கான பொறுப்பான முதனிலை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் ரீ.தயாபரன், முகாமையாளர் ரீ.இராஜேந்திரன், இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் மற்றும் ஊடகவியலாளர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது ஊடக தர்மமும் ஊடக ஒழுக்கமும், ஊடகத்துறையின் நல்லிணக்கமும் மீள் ஒழுக்கமும் எனும் தலைப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை மற்றும் ஊடகத்துறையின் முதனிலை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா விரிவுரையினை நிகழ்த்தினார். இதன்போது வறைமுறையற்ற சமாதானத்தை தொடர்ச்சியாக நாட்டிலே ஏற்படுத்தல், சமாதானத்திற்கான சமூகநலச் செயற்பாடுகள், குடும்பம் முதல் அரசாங்கம் வரையும் முறையாக நல்லிணக்கம் பேணப்படுதல், நாட்டிலே நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்தை ஏற்படுத்தல், மக்களின் மனங்களை வெல்லக்கூடிய வகையில் ஊடகங்கள் எவ்வாறு? செயற்பட வேண்டும்,மற்றும் ஊடகவியலாளர்களின் திறன்விருத்தி, மனநிலை மாற்றம், ஆளுமை விருத்தி, நல்லிணக்கம் பேணுதல் விடயங்கள் இதன்போது விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டது.

இங்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை மற்றும் ஊடகத்துறைக்கான பொறுப்பான முதனிலை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா கருத்து தெரிவிக்கையில்... ஊடகத்துறையானது ஊடகத்தர்மத்தை முறையாக கடைப்பிடித்தால் இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் எட்டப்பட்டிருக்கும்.சமூகத்தில் சமாதான மாற்றங்கள் ஏற்படவேண்டுமாயின் அரசாங்க உத்தியோகஸ்தர்களும்,அரசியல்வாதிகளும் நல்லிணக்கம் பற்றி பேசுவதற்கு முன்வரவேண்டும் எனத்தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08