(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சிறப்பு அணியில் இலங்கையின் சகலதுறை வீராங்கனை தெவ்மி விஹங்கா இடம்பிடித்துள்ளார்.
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த தெவ்மி விஹங்கா, அவசியமான வேளைகளில் அணிக்கு ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் எதிரணிகளின் விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்.
இந்த சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளைக் கைப்பற்றிய விஹங்கா, அடுத்த போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக 55 ஓட்டங்களைப் பெற்றார். இந்த இரண்டு பெறுதிகளும் அவரது தனிப்பட்ட அதிசிறந்த பெறுதிகளாகப் பதிவாகின.
இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் மிகத் திறமையாக பந்துவீசிய விஹங்கா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதில் இந்திய அணித் தலைவி ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ் ஆகியோரின் விக்கெட்களும் அடங்கியிருந்தன. அவர்கள் இருவரும் இந்திய சிரேஷ்ட அணி வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சுற்றுப் போட்டியில் விஹங்கா மொத்தமாக 113 ஓட்டங்களைப் பெற்றதுடன் 9 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றய விஹங்கா, துடுப்பாட்டத்தில் 37 ஓட்டங்களைப் பெற்றார். கடைசிவரை விறுவிறுப்பைத் தோற்றுவித்த அப் போட்டியில் ஒரு ஓட்டத்தால் இலங்கை தோல்வி அடைந்தது.
19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 சிறப்பு அணியின் தலைவியாக இங்கிலாந்தின் சகலதுறை வீராங்கனையும் தலைவியுமான க்றேஸ் ஸ்க்ரிவன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சுற்றுப் போட்டியில் 3 அரைச் சதங்களுடன் 293 ஓட்டங்களை மொத்தமாகப் பெற்று அதிக ஓட்டங்கள் குவித்தவர்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். அத்துடன் 9 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.
இந்திய ஆரம்ப வீராங்கனை ஷ்வெட்டா செஹ்ராவத் சிறப்பு அணியிலும் ஆரம்ப வீராங்கனையாக பெயரிடப்பட்டுள்ளார். அவர் 3 அரைச் சதங்களுடன் 99 என்ற சராசரியுடன் 297 ஓட்டங்களைப் பெற்றார். இதுவே சுற்றுப் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். தென் ஆபிரிக்காவுக்கு எதிராக அவர் பெற்ற ஆட்டமிழக்காத 92 ஓட்டங்கள் தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக பதிவானது.
அவரது ஆரம்ப ஜோடியாக ஸ்க்ரிவன்ஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலக சிறப்பு அணி (துடுப்பாட்ட வரிசையில்)
ஷ்வெட்டா செஹ்ராவத் (இந்தியா), க்றேஸ் ஸ்க்ரிவன்ஸ் (தலைவி - இங்கிலாந்து), ஷஃபாலி வர்மா (இந்தியா), ஜோர்ஜியா ப்ளிம்மர் (நியூஸிலாந்து), தெவ்மி விஹங்கா (இலங்கை), ஷொர்ணா அக்தர் (பங்களாதேஷ்), கராபோ மெசோ (விக்கெட் காப்பாளர் - தென் ஆபிரிக்கா), பர்ஷவி சொப்ரா (இந்தியா), ஹனா பேக்கர் (இங்கிலாந்து), எலீ அண்டர்சன் (இங்கிலாந்து), மெகி க்ளார்க் (அவுஸ்திரேலியா). 12ஆவது வீராங்கனை அனோஷா நசிர் (பாகிஸ்தான்).
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM